பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 7

7


போனமையாலும், அதன் பின்னரும் இயற்கையாகவும் செயற்கையாகவும் தமிழுக்கு நேர்ந்துள்ள பல இன்னல்களின் விளைவாகவும், பல தமிழ்ச் சொற்களும் சொல் வடிவுகளும் இன்று தமிழல்லாத திரவிட மொழிகளிலேயே வழங்கிவரக் காண்கின்றோம்.

எ-டு :

சொல்
சொல் வடிவு
(தெலுங்கு) எச்சரிக்கை
நன் (நான் என்பதன் வேற்றுமையடி)

இற்றைத் தமிழிலில்லாது பிற திரவிட மொழிகளிற் சிறப்பாக வழங்கும் தென்சொற்கள், திசைச்சொல்லின் பாற்படும்; சொல்வடிவுகள் குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) என்னும் நெறிமுறைக்கெடுத்துக்காட்டாம். திரவிட மொழிகளுள், தமிழை வளம்படுத்தற்கும் தமிழ் இலக்கணச் சொல்லுறுப்புகளின் பண்டை நிலையை அறிதற்கும் மலையாளம் போல் உதவுவது பிறிதொன்றுமில்லை.

எ-டு :

(1) கின்று என்னும் நிகழ்கால இடைநிலை

 
கின்று என்னும் நிகழ்கால இடைநிலை, குந்நு -உந்நு என்று
மலையாளத்திலும்,(குந்நு) - குந் - உந் - ந் என்று தமிழிலும் தரியும்.
செய்கின்று-செய்குந்நு-செய்யுந்நு (மலை.)

எ-டு :

 
செய்கின்றான் - செய்குந்நான் - செய்குநன் - (தமிழ்)
செய்குந்நான் - செய்யுந்நான் - செய்யுநன் - செய்நன் - (தமிழ்)
''மகிழ்நன்'', ''வாழ்நன்'' (வாணன்) முதலியன இங்ஙனம் தரிந்தவையே.

(2) செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல் வினை

செய்யாதே என்னும் எதிர்மறை ஏவல், மலையாளத்தில் செய்யருது என்னும் வடிவு கொண்டு நிற்கும். ''செய்யருது'' என்பது ''செய்யரிது'' என்பதன் தரிபு. ''செய்யரிது'' என்பது முறையே, செய்ய முடியாது, செய்யக்கூடாது என்னும் பொருளது, அருது (அரிது) என்பது மலையாளத்தில் தனிவினை யாகவும் வரும்.

எ-டு :

 
ஈ ஆள்க்கு வேறே பணி அருது=இவ் ஆட்கு வேறுவேலை கூடாது.
''ஆர்க்கானும் கொடுக்கும் போழ் அருதென்னு விலக்கருது. (பழமொழி)

(3) யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சம்

தமிழ் வினைமுற்றுகள் முதற்காலத்தில் எச்ச வடிவில் வழங்கிப் பின்பு முற்றீறு புணர்ந்தனவாதலின், அவற்றைப் பகுக்கும்போதும் எச்சமும் ஈறுமாகவே பகுத்தல் வேண்டும்.