நூல் நுவல் பொருள்
4. |
மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன் |
|
பொருவில்
புண்ணிய போகம்1 புணர்ப்பதும் |
|
வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத் |
|
தெரிவு றுப்பதுஞ் செப்புத2
லுற்றதே. |
(இ-ள்.)
(இந்நூல், மாந்தர்க்கு) மருவு-(தம்மை) அடைதற்குரிய, வெவ்வினைவாயில்-தீவினைகள்
வரும் வழியை, மறுத்து - தடுத்து, உடன் - உடனே, பொருவு இல் - நிகரற்ற, புண்ணிய போகம்
- நல்வினையாலாய இன்பத்தை புணர்ப்பதும்-அடைவிப்பதையும், வெருவு செய்யும்- (உயிர்கட்கு)
அச்சத்தை உண்டாக்குகின்ற, வினைப்பயன்-தீவினையின் பயன், இற்று என - இத்தகைத்தென,
தெரிவுறுப்பதும்- அறிவிப்பதையும், செப்புதலுற்றது-சொல்லக் கருதிற்று.
இந்நூல் மாந்தர்க்கு வினைவரும் வழியைத்தடுப்பதையும்,
நல்வினைப்பயன் அடைவிப்பதையும், தீவினைப் பயன் இதுவெனத் தெரிவிப்பதையும் கூறக்
கருதிற்றென்க.
வெவ்வினை மருவும் வாயில், ஊற்று எனப்படும் வடநூலார்
ஆஸ்ரவம் என்பர். இது ஹீனாஸ்ரவம் முதலாகப் பத்துவகைப்படும் (யசோ.69. உரை.)
மறுத்தல்-வினைகள் வரவொட்டாது தடுத்தல்; இது- ‘செறிப்பு’
எனப்படும்; ஸம்வரை என்பர் வடநூலார். ‘வினைவழி விலக்கிநிற்கும்.... செறிப் பிதாமே‘
(மேரு.99) என்று கூறியிருப்ப தறிக.
பொருவுஇல் புண்ணியம் - ஒப்பில்லாத புண்ணியம் இதனை
வடநூலார் தர்மாநுபந்தி புண்ணியம் என்பர். தர்மாநுபந்தி புண்ணியம் அதர்மாநுபந்தி
புண்ணியம் என்றுபுண்ணியம் இருவகை.
1 பண்ணியம்போகம்,
2 தெருவுறுப்பதும்.
|
|