பக்கம் எண் :

Yasodara Kavium

- 11 -

   i    தர்மாநுபந்தி புண்ணியம்; உயிர்கள் மேலும் மேலும் புண்ணியம் வருவதற்குக் காரணமான தூய எண்ணத்தையும் தூயவாழ்க்கையையும் மேற்கொண்டு முடிவில் முக்தியடையும்படி செய்வது.

   ii  அதர்மா நுபந்தி புண்ணியம் - அந்தப் புண்ணியத்தின் எல்லைவரை சுகமாக வாழ்ந்தபோதிலும் மேலும் மேலும் பாவம் வருவதற்குக் காரணமான தீய எண்ணத்தையும் தீய தொழிலையும் மேற்கொண்டு இறுதியில் நரகம் முதலிய தீயகதிகளை அடையும்படி செய்வது.

அனுபந்தி என்பது - ‘தொடர்ந்து வருவது’ என்ற பொருளது; இவற்றின் விரிவை, ‘நல்லவரம் புண்ணியம’ என்னும் (மேரு. 98) வாமனமுனிவர் கூற்றானும், ஸ்ரீபுராணம், பதார்த்தசாரம் முதலியவற்றானும் அறிக.  ‘போகம்’ என்பது அனந்த சுகமுமாகும்.  தெரிவுறுத்தல் - விளக்குதல். புணர்த்தல்-சேர்த்தல்.  வெருவு, தொழிற் பெயர்.

நூல்

முதற் சருக்கம்

 நாட்டுச் சிறப்பு

5.  பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை
  நம்பு நீரணி நாடுள தூடுபோய்
  வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ
  திம்ப ரீடில1 தௌதய மென்பதே.

(இ-ள்.) பைம்பொன் - பொன்மலையாகிய மகாமேருவினை (நடுவில்) உடைய, நாவல் பொழில்-நாவலந்தீவின்  தென்பாலிருக்கிற, பரதத்திடை - பரதகண்டத்தில்,  நம்பும் நீர்-(எவ்வுயிரும்)விரும்பும் நீர்வளத்தால், அணிநாடு-அழகு பெற்றநாடு, வம்பு வார் பொழில்- மணமிக்க உயர்ந்த சோலை,  ஊடுபோய் - வாயுமண்டலத்தி னிடையே

 

1 விம்பரீடில.