(இ-ள்.)
வானவர் போகம் - வானுலகத்திலுள்ளதேவபோகத்துக்கு உரியசுவர்க்கலோகமும், அசைவிலா
- அழிவிலாநிலைபேறுடைய, அளாகாபுரி - குபேரனுடைய அளகாபுரியும், அலால்-அல்லாமல்,
இசைவு இலாத-(தன்னோடு)ஒப்புக்கூறற்கு ஏற்றதுவேறொன்றும் இல்லாததாகிய, இராசபுரம்
அது - இராசமாபுரம், திசை - எண்திசையிலும், உலாம் - சென்று பரந்த, இசையும் - புகழும்,
திருவும்-(எண்வகைச்)செல்வமும், நிலாய்-(தன்னிடத்து) நிலவப் பெற்று, வசை - குற்றமென்பதே,
இலா-இல்லாத தாகிய, நகர் அஃது-(ஒளதயத்தின்) தலைநகரமாகும்)
இராசமாபுரம் எவ்வகையிலும் சிறந்ததென்க.
‘இசையால் திசை போயது’ என்றார் திருத்தக்க தேவரும்.
இசையுடைய நாடு ஆகலின் வசையிலதாயிற்று. வசை, பழிப்பெனினுமாம்; ‘வசையென்ப வையத்தார்க்
கெல்லாம் இசையென்னு, மெச்சம் பெறாஅவிடின்‘ என்று (குறள், 238.) தேவர் கூறுவதனை
அறிக.
‘திருவும் நிலாய் வசையிலா நகர’ என்றமையால் ஈண்டுக் கூறிய
இசை பெரும்பாலும் ஈதல்மேற்று. ‘நிலை பேறுடைமையின்’அசைவிலாதது என்றார். இனி, அசைவு-வருத்தம்
எனினுமாம். பசி, பிணிமுதலியவருத்தம் அளகாபுரிக் கின்மையால், ‘அசைவு இலா அளகாபுரி’
என்றார்; ‘உறுபசியு மோவாப்பிணியுஞ் செறுபகையுஞ், சேராதியல்வது நாடு’ என்று (குறள்.734.)
கூறியிருப்பது காண்க. அளகாபுரி; குபேரன்நகரம். இராசபுரம் அதனை நிகர்க்கும்.
இசைவு உவமை. இராசபுரமது என்பதில் ‘அது‘ பகுதிப் பொருள் விகுதி. நகர் -
புரம் எனவும், பட்டணம் எனவும், நாடு-தேசம் எனவும் வழங்கும். பலநாடுகளிலும் சிறந்து
தலைமை வகித்திருப்பதனால் இராசபுரம் என் பெயர்பெற்றதென்னலாம்.
இனி, ‘வானவர் போகம்’ என்பதற்கு, தேவர் உலகத்தைப்
போல இன்பந் தருவது என்னலாம்.(2)
|