மரங்கள் (தம் மலர்களாகிய), வாங்கு-வளைந்த, சாமரை-சாமரையைக்கொண்டு,
வளைத்தன-வீசின; வண் டொடு-வண்டினங்களோடு, தேனினம்-தேனீத்தொகுதிகள், கூம் குயில் குலம்-(இன்பம்பெறக்) கூவுங் குயிற்கூட்டத்தின்,
ஒலி-ஓசையை, இன்இயம் கொண்டு - இனிய முழவாகக் கொண்டு, பாங்கு-அம் முழவுக்கிணங்க,
பாடின- (எ-று.)
வயந்தமன்னன் வருங்கால், சோலைக்க ணிருந்த கோங்கு
பொற்குடை கவிக்க, வாகை சாமரை யிரட்ட, வண்டுந் தேனும் குயிலின்குரல் முழவாக அமையப்
பாடின என்பதாம்.
வசந்த காலத்தில் கோங்கும் வாகையும் மலர்தலும், மலர்த்தேனைத்
தேனினமும் வண்டினமும் உண்ணற்கு ஒலித்தலும், குயில்கள் இனிமை தோன்றக் கூவுதலும் இயல்பு.
இவ் வியற்கையை ஆசிரியர், வசந்த காலம் அரசனாகவும், கோங்கமலர் முதலியவை அவ்
வரசச் சின்னமாகவும் உருவகித்துள்ளார். முன்னர் 13-ஆம் செய்யுளில், ‘வயந்த மன்னவன்
வந்தனன’ என்று கூறுவது காண்க.
வசந்த
காலத்தில் கோங்கம் பொற்குடைபோன்ற பொன்னிறமலர் மார்தலை,
“கோங்கெலாங் கமழ மாட்டா குணமிலார் செல்வமே போற்பாங்கெலாஞ்
செம்பொன்பூப்ப விரிந்தது பருவம்”* எனவும்,
‘குடையவிழ்வன கொழுமலரன குளிர்களியன கோங்கம்’
1 எனவும்.
‘குடைமாக
மெனவேந்திக் கோங்கம் போதவிழ்ந்-தனவே’2
எனவும் தோலாமொழித்தேவர் கூறியிருத்தல் காண்க. வாகைப்பூ
சாமரைபோல மலரு மியல்பினதாதவின், ‘வாகை வளைத்தன சாமரை‘ என்றார். குயிலிசை
*
சூளா. இரத. 43.
1 சூளா. தூது, 5.
2 சூளா. இரத. 52.
|
|