பக்கம் எண் :

Yasodara Kavium

- 20 -

என்னும் (சூளா இரத.51,ம்) செய்யுள் ஈண்டு அறியத்தக்கது.  ஆடினர், முற்றெச்சம்.  ‘மாவினமே‘ என்றதில் ஏ, அசை.                      (8)

அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்

13.  உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட
  வயந்த மன்னவன் வந்தன னென்றலும்
  நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும்
  வயந்த மாடு வகையின ராயினர்.

(இ-ள்.) வயந்தமன்னவன்-வசந்தகாலமாகிய வேந்தன், உயர்ந்த சோலைகளோடு- வானளாவிய சோலைகளிடத்து, எதிர்கொண்டிட - (அச்சோலைகளின் மரங்கள் முதலியன) எதிர்கொண்டு வரவேற்க, வந்தனன்-வந்துள்ளான், என்றலும்-என்று (வனபாலகன்) அரசனுக்குக் கூறலும், நயந்த மன்னனும்-(வசந்தகாலத்தை) விரும்பிய மாரிதத்தனென்னும் அரசனும், நல்நகர் மாந்தரும்-அவ்விராஜமாபுரத்துமக்களும், வயந்தம்-வேனில் விளையாட்டை, ஆடு வகையினராயினர்-மேற்கொள்ளும் முயற்சியுடையராயினர். (எ-று.)

வேனில் வரவை யறிந்த மன்னனும் மக்களும் வசந்த விழாக் கொண்டாட முற்பட்டன ரென்க.

‘உயர்ந்த சோலைகள் எதிர் கொண்டிட வயந்தமன்னவன் (அவற்றின்) ஊடு வந்தனன்’ என இயைத்தலுமாம். இனி, ‘வசந்தமாடு உவகையினர் ஆயினர’ என்றும் பிரித்துப் பொருள்
கூறலாம்.         (9)

14.  கானும் வாவியுங் காவு மடுத்துடன்
  வேனி லாடல் விரும்பிய போழ்தினில்
  மான யானைய மன்னவன் றன்னுழை
  ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார்.

(இ-ள்.) (அரசனும் நகரமாந்தரும்), கானும்-வனமும், வாவியும்-நீர் நிலையும், காவும்-சோலையும், அடுத்து-