பக்கம் எண் :

Yasodara Kavium

- 21 -

அணுகி, உடன்-உடனே (அப்போதே), வேனில் ஆடல்-வசந்த விளையாட்டை, விரும்பிய போழ்தினில்-விரும்பிய சமயத்தில், மான யானை அ மன்னவன் உழை - பெருமை பொருந்திய யானையையுடைய அம் மன்னனிடம், ஏனைமாந்தர்-அந் நகரமாந்தருட் சிலர், இறைஞ்சுபு-வணங்கி, கூறினார்-(பின்வருமாறு) கூறுவாராயினர். (எ-று,)

மன்னனும் மாந்தரும் விழாவயர விரும்பிய சமயத்தில், மாந்தருள் ஒருசாரார், மன்னனிடம் (பின்வருமாறு) கூறுவாராயினரென்க. இங்கு ஏனைமாந்தர் என்பார், தத்துவங்கொண்ட கேள்வியுங் கூரறிவும் இலாத் தொண்டர்களாவர்; யசோ. 18-ஆம் பாட்டுக் காண்க.  வாவி-வாபீ என்பதன் சிதைவு; வாவி-ஆற்றில்ஓடை என்பர் நச்சினார்க்கினியர். ‘இறைஞ்சுபு, ‘செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  ‘யானைய’ என்பதில் அ, அசை எனவுமாம்.

ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்

15.  என்று மிப்பரு வத்தினோ டைப்பசி
  சென்று தேவி சிறப்பது செய்துமஃ
  தொன்று மோரல மாயின மொன்றலா
  நன்ற லாதன நங்களை வந்துறும்.

(இ-ள்.) என்றும்-ஆண்டுதோறும், இப்பருவத்தினோடு-இவ் வேனிற் பருவத்திலும், ஐப்பசி-ஐப்பசிமாதத்து அஷ்டமியிலும், சென்று-(கோவிலுக்குச்) சென்று, தேவி சிறப்பு செய்தும்-மாரிதேவிக்குச் சிறப்புச் செய்வோம்; அஃது-அச்சிறப்பினை (இப்போது), ஒன்றும் ஓரலம் ஆயினும்-சிறிதும் கருதாதவர்களாயினேம்; (ஆதலின்), ஒன்றுஅலா-பலவாகிய, நன்று அலாதன-தீங்குகள், நங்களை வந்துறும் - நம்மை வந்தடையும்.                  (எ-று,)

அரசனிடம் ஏனைமாந்தர், மாரிதேவியின் சிறப்பைச் செய்ய மறந்த காரணத்தால் நம்மைத் தீங்கு அடையும் என்றன ரென்க.