யசோதர
காவியம்
தற்சிறப்புப்பாயிரம்*
கடவுள்
வாழ்த்து
1. |
உலக மூன்று மொருங்குணர் கேவலத் |
|
தலகி லாத வனந்த குணக்கடல் |
|
விலகி வெவ்வினை வீடு விளைப்பதற் |
|
கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம். |
(இதன் பொருள்.) உலகம் மூன்றும்
- மூன்றுலகங்களையும், ஒருங்குஉணர் - ஒரே சமயத்தில் ஒருசேர உணரும்இயல்புடைய, கேவலத்து
- கைவல்யபதத்தினையடைந்த, அலகு இலாத-எண்ணிறந்தனவாகிய, அனந்தகுணக்கடல்-அனந்தஞானாதிகுணங்கள்
கடல் போல்நிறைந்த அருகத்பரமேஷ்டியின், இலகும் மாமலர் சேவடி-விளங்குகின்றசிறந்த
தாமரை மலர் போன்ற சிவந்தபாதங்களை, வெவ்வினைவிலகி- தீயவினைகளின் நீங்கி,
வீடு விளைப்பதற்கு - வீடு பேற்றினை உண்டாக்கிக்கோடற்கு (மோஷத்தை அடை தற்பொருட்டு),
ஏத்துவாம்-யாம் துதிப்பாம்,(என்றவாறு.)
(கருத்துரை.) வினைகளின் நீ்ங்கிவீடு அடையவேண்டி
முற்றும் உணர்ந்த கேவலியின் (கைவல்ய பதத்தினை எய்திய அருகத்பரமேஷ்டியின்) சேவடியை
வணங்குவாம் என்க.
*
|
“தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளு
மெய்தவுரைப்பது தற்சிறப்பாகும்” என்பது இலக்கணம். |
|