(விரிவுரை.) கேவலத்து அனந்த குணக்கடல்சேவடியை வெவ்வினைவிலகி வீடுவிளைப்பதற்கு ஏத்துவாம்
என இயைக்க.
உலகம் என்றது--அதிலுள்ள பொருள்களைக்குறிக்கும். 1அப்பொருள்
ஜீவன் முதலாக ஆறுவகைப்படும்.
‘ஜீவன்முதலிய பொருள்கள் எதுவரைக் காணப்படுமோ அதுவரை உலகம்’
என்னும் பொருள்பட, ‘லோக்யந்தேஜீவாதய: பதார்த்தாயஸ்மிந்ஸ: லோக‘;(பஞ்சாஉரை)
என்பது ஈண்டு அறிதற்பாற்று. உலகம் மூன்றாவன; கீழு
லகம்,
மத்தியமவுலகம், மேலுலகம் என்பன. நரகர் வசிக்கும் 2
கீழுலகத்தினை,
3 இன்னாவுலகம்‘ என்றும், தேவர் வசிக்கும் மேலுலகத்தினை ‘அவ்வுலகம்‘
என்றும், நாம் வசிக்கும் மண்ணுலகத்தினை, ‘இவ்வுலகம்‘ என்றும் தேவர்
கூறியதனானும், “உலகமொரு மூன்று மேத்த” (சீவக. 1) என்றும், “வையமூன்றுமுடனேத்த” (சீவக.3019)
என்
1 |
பொருள்
ஆறுவகை அவையாவன
:-
|
1. |
ஜீவன்: |
|
ஞானம்
முதலிய குணங்களை யுடையது. |
|
|
2. |
புத்கலம்: |
|
ஐம்பொறிகளால்நுகரப்படுவனவும்,
அணுவும், அணுக்கூட்டங்களும். |
|
|
3. |
தர்மம்: |
|
ஜீவனும்
புத்கலமும் செல்வதற்கு (இயங்குவதற்கு) இத்துணைக் காரணமானது;
(புண்யகாரணமெனப் பொருள் படுந் தர்மத்தின் வேறானது. |
|
|
4. |
அதர்மம்; |
|
ஜீவனும்
புத்கலமும் நிற்றலுக்குத் துணைக்காரணமானது. |
|
|
5. |
ஆகாசம்; |
|
பொருள்
அனைத்திற்கும் இருக்க இடந்தருவது. |
|
|
6. |
காலம்; |
|
சமயம்
நாழிகை முதலியவற்றிற்குக் காரணமானது. |
|
|
2 |
நாகர்லோகம்
எனினுமாம். (சீவக. 2813 - உரை) |
|
|
3 |
‘அருள்
சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை யிருள்சேர்ந்த, இன்னாவுலகம்புகல்.‘(குறள்.243.) |
|
‘அருளில்லார்க்
கவ்வுலகமில்லைப் பொருளில்லார்க், கிவ்வுலகமில்லாகியாங்கு.’
(குறள்.247). |
|
|
|