பக்கம் எண் :

Yasodara Kavium


- 324 -

தாங்கள் அடைதற்குக் கூறப்பட்டுள்ள குணங்களை யெல்லாம், கண்ணினார் - (உள்ளத்தில்)  கருதினார்கள்:  தமது உருவினது உடலங்கள் கழிந்தன - தங்கள்  உருவுடம்பு கழிந்தன, (பின்) கழிபோகத்து எண்ணில் வானுலகத்து - மிக்க போகத்தில் அளவில்லாத கற்பவுலகத்து, இரண்டாவதில் - ஈசானகற்பத்தில்,  இமையவர் தாம் ஆனார் - தேவர்களானார்கள். (எ-று.)

அபயருசியும் அபயமதியும் தேவர்க ளானர்க ளென்க.

அபயன் - அபயருசி, எண்ணில் இரண்டாவதின் என்று  கொண்டும் பொருள் கூறலாம்.  குணமெல்லாம் என்றது, ‘அறிவு நற்காட்சி காந்தி சாந்தி நல்லடக்கமைந்து, பொறிகளிற் செறிவு குப்தி சமிதியும்  பொருந்தியாசை, வறுவிய மனத்துத் தண்டங் காரவஞ் சன்னை வீந்தஉறுதவம்‘ (மேரு. 344) முதலியவற்றை.  (97)
317.  அம்பொன் மாமுடி யலர்கதிர்க் குண்டல மருமணி திகழாரஞ்
  செம்பொன்மாமணி தோள்வளைகடகங்கள் செறிகழன்முதலாக்
  நம்பு நாளொனி நகுகதிர்க் கலங்களி னலம்பொலிந் தழகார்ந்த
  வம்பு வானிடு தனுவென வடிவுடை வானவ ரானாரே.

 (இ-ள்.) (அவ்விருவரும்), அம்பொன் மாமுடி - அழகிய முடியும், அலர் கதிர் குண்டலம் - ஒளிருங் கிரணங்களையுடைய கர்ண குண்டலகங்களும், அரும் மணி திகழ் ஆரம் - அரிய மணிகள் விட்டொளிரும் ஆரங்களும், செம்பொன்மாமணி தோள்வளை - பொன்னில் மணி பதித்திழைத்த தோட்செறியும், கடகங்கள் - அஸ்த கடகங்களும், செறிகழல் முதல்ஆக - காலிற் கட்டப்படும் வீரக்கழல் முதலாகவுள்ள, நம்பும் - விரும்புகின்ற, நாள்ஒளி நகு கதிர் - ஞாயிற்றின் ஒளியையும் நகும் ஒளியுடைய, கலங்களின் நலம்-(ஷோடச) ஆபரணங்களின் நலனும், பொலிந்து  - பொலிவு பெற்று, அழகு ஆர்ந்த - அழகு நிறைந்த, வம்புவான் இடு தனுஎன - புதுமையாக வானில் இடும் இந்திரதனுசு போல, வடிவு உடை-உடம்பினையுடைய, வானவர் ஆனார் - தேவர்களானார்கள்.

அவ்விருவரும் கலன் நிறைந்த அழகுடைய தேவரானாரென்க.