(ஸ்ரீபுராண. பக் 402.) அடங்குதல் -பொறிவாயில் ஐந்த வித்தல்.
மையில்வான் என்னும் பாடத்திற்கு, குற்றமில்லாதவானம்என்னலாம். அனசனர்-உபாசகர்:
சிராவகர். பல்வேறு உருவம்கொள்வதற்குக் காரணமான அணிமா முதலிய எண்
குணங்களை (யசோ, 319) யுடைய தேவர்களுக்குத் தேவியர் பலராதலின்‘
தொகுதி‘ என்றார். தேவன் பிறப்பதற்கு முன்னரும் (அவன்) தேவியர் தோன்றுதல்
இயல்பு; அவர்கள் சமவசரணம் முதலிய இடங்களில் தங்கள் நாயகன் யார் என்று வினவித்
தெரிந்துகொள்வர்: மற்றும், ஒருதேவன் மரண மெய்துவதற்குள் அவன்மனைவியர் பலர் தோன்றி
மரித்தல் இயல்பு: தேவனுக்குக் கடலும் தேவியர்க்குப் பல்லமும் வாழ்நாளாதலின் என்க.
பல்லம் பத்துக் கோடா கோடி கொண்டது ஒரு கடல். தேவன் இறந்த பின்னரும் உயி்ர்
வாழ்ந்திருக்கும் அவன் மனைவியர் ஆலயவழிபா டியற்றி, கற்புநெறியின் வழுவாதுநின்று நற்கதி பெறுதலும் மரபு. இவை யாவும் ஸ்ரீபுராணத்தில் காணலாகும். குழாங்களில் என்றும்
பாடம். (96)
316. |
அண்ண லாகிய வபயனுந் தங்கையு |
|
மாயுக
மிகையின்மை |
|
நண்ணி நாயக முனிவனி னறிந்தனர |
|
நவின்றநற்
குண1 மெல்லாம் |
|
கண்ணி
னார்தம துருவின |
|
துடலங்கள்
கழிந்தன2 கழி போகத் |
|
தெண்ணில் வானுல கத்திரண் டாவதி |
|
னிமையவர்
தாமானார் |
(இ-ள்.) அண்ணலாகிய
அபயனும் - பெருமையிற் சிறந்தோனாகிய அபயருசியும், தங்கையும் - அவன் தங்கையாகிய
அபயமதியும், நண்ணி - (சுதத்தாசார்யரை) அடைந்து, நாயக முனிவனின் - அந்த முனிநாதரால்,
ஆயு கம் மிகை யின்மை - தங்களுக்கு ஆயுள் அதிக மின்மையை, அறிந்தனர்
- அறிந்தவர்களாகி, நவின்ற நற்குணமெல்லாம் -
1
நவின்றனர்குண.
2
கழிந்தனர். |
|