நறுமென் காற்று வீசுவதும், துந்துபி ஒலிப்பதும் இயல்பு.
இதனை, ‘காரென மலர்கள் மாரி கற்பக மரங்கள் வீழ்த்த, வாரணி முரச மெங்கும் முழங்க
நந்தனவனத்தில், வேரியுந் தாது மேந்தி மந்த மாருதங்கள் வீசச், சீரணி கொங்கையாருந்தேவரும்
சென்று சேர்ந்தார்‘ என்று (மேரு. 484) கூறியதனாலறிக. அரம்பையர் - நடனமாதர்.
தேவியர் - மனைவியர்: இவர்கள் அத்தேவர்களுக் கெனப் பிறந்திருந்தவர்கள். (99)
319. |
மாசின் மாமணி மேனியின் வாசமொ
ரோசனை மணநாறத் |
|
தேசொ ரோசனை திளைத்திட முளைத்தெழு
தினகர னனையார்கள் |
|
ஆசி லெண்குண னவதியொடமைந்தனரலைகடலளவெல்லாம |
|
ஏசில் வானுல கிணையிலின் பத்தினி
லிசைந்துட னியல்கின் |
|
[றார். |
(இ-ள்.)
முளைத்து எழும் தினகரன் அனையார்கள் - கடலில் தோன்றும் உதய சூர்யனைப் போன்ற அவ்விரு
தேவர்களும், மாசு இல் மாமணி - பதினாறுகுற்றம் நீங்கிய மாணிக்கம் போலும், மேனியின்
வாசம் - --, ஓர் ஓசனை - ஒருயோஜனை தூரம், மணம்நாற - மணம் கமழுவும், தேசு - மேனியின்
ஒளியும், ஓர் ஓசனை திளைத்திட - ஒரு யோஜனை தூரம் வீசவும், ஆசுஇல் எண்குணன் - குற்றமற்ற
அணிமா முதலிய எண்குணங்களோடும், அவதி யொடு - அவதிஜ்ஞானத்தோடும், அமைந்தனர்
- பொருந்தினவாரகி, அலை கடல் அளவு எல்லாம் -தங்களுக்குரிய இரண்டு கடற்காலமெல்லாம்,
ஏசுஇல் வான் உலகு - பழிப்பில்லாத விண்ணுலகத்து, இணைஇல் -இணையிலா,
இன்பத்தினில் - --, இசைந்து - பொருந்தி, உடன் - அவ்விருவரும்
ஒரு தன்மையராகவே. இயல்கின்றார் - நிகழ்பவராயினர். (எ-று.)
அவ்விரு
தேவர்களும் மேனியின் மணமும் ஒளியும் ஒரு யோஜனை தூரம் செல்ல, எண்குணமும் அவதிஜ்ஞானமும்
பொருந்தி, இரண்டுகடற்கால முழுதும் தேவியருடன் இன்புறுவாராயினர் என்க.
மாசுஇல் மாணிக்கமென்றது 16 குற்றமும் நீங்கிய மாணிக்கம்
என்க. ‘மாணிக்கத்தியால் வகுக்குங்காலை...பன்னிரு குணமும் |