பதினறு குற்றமும்‘. என்னுஞ் சிலப்பதிகாரம் (ஊர்காண்
காதை- 186, 7ன்உரை) காண்க. வாசமும் ஒளியும் ஒர் ஓசனை வீசுவதனை, ‘வாசமொரோசனை
நின்று நாறிடும், தேசுமோரோசனை சென்றெறித்திடும், தூசணி மாசெய்தா மேனியின்
குணம’ என்று (மேரு, 510) வாமன முனிவரும் கூறிய தறிக. திளைத்தல்
- நிறைதல். அணிமா முதலிய எட்டினை, ‘அணிமா மஹிமா... பூதய:’ என அமர கோசத்திலும், மன்னிய வணிமா மற்றை மஹிமாவே கரிமாவோடு,
பின்னுறு லமிகா ப்ராப்தி பெறும் பிராகாமியங்கள், முன்னுறு மீசத்வம் பின் முற்றிய
வசித்துவந்தான்,உன்னிய நூல்களோது மோரிரு நான்கே சித்தி‘ என்று சூடாமணி(பல்பெயர்
: 12,81.) நிகண்டிலும் கூறியதனால் அறியலாகும். அவதி - பவப்ரத்யயம்: ‘பவத்தைச்சார்ந்
தெழுந்த வோதி‘ (மேரு. 485) என்றது அறிக. மகர்த்திக தேவராதலின், ‘இணையிலா இன்பம்’ என்றார். (100)
320. |
வெருவுறு வினைவலி விலக்கு கிற்பது |
|
தருவது சுரகதி தந்து பின்னரும் |
|
பொருவறு சிவகதி புணர நிற்பது |
|
திருவற நெறியது செவ்வி காண்மினே. |
(இ-ள்.) திருவற நெறி - திருவறத்தை யுடைய சமயமானது, வெருவு உறு வினைவலி -அஞ்ச வருகின்ற கொடிய வினைகளின்
வலிமையை, விலக்கு கிற்பது - விலக்கும் வன்மையுடையது; சுரகதி தருவது - (தன்னையுடையார்க்குத்)
தேவகதியை நல்குவது, தந்து - அதனை அளித்து, பின்னரும் - அதன் பின்னும், பொருவு அறு
- ஒப்பற்ற, சிவகதி புணரநிற்பது - மோக்ஷகதியை அடையுமாறு நிற்பது: செவ்வி காண்மின்
- அதன் தன்மையை (இந்நூலின்கண்) அறிமின். (எ-று.)
இந்நூலிற் கூறும்திருவறநெறி, வினைகளைத் தவிர்த்து முக்தி எய்துவிப்பது
என்க.
சிவகதி - இன்பந்தரும் கதி. திருவறம் - ஜிநதருமம்.
யசோதர
காவியம் உரையுடன் முற்றும்
-------
|