(இ-ள்.)
நாதன் - அருக பதவியடைந்த, அம்-அழகிய. முனிசுவ்வுதன் - முனிசுவ்ரத தீர்த்தங்கரர்,
நல்கிய-உபதேசித்தருளிய, தீது தீர் திகழ்-குற்றமின்றி விளங்கும், தீர்த்தம் -
ஆகமவுபதேசம், செல்கின்றநாள் - நடந்து வரும்நாளில், யசோதரன்- யசோதரமன்னன்,
ஏதம் அஃகி எய்தியது-(திருவறப்பெருமையினால்) தீமை சுருங்கி (நற்கதி) அடைந்ததனை,
ஒத-(இக்காவியவாயிலாகக்)கூற, உள்ளம்-(என்)மனம், ஒருப்படுகின்றது - துணிகின்றது.
ஸ்ரீமுனிசுவ்ரத தீர்த்தங்கரா1
காலத்தில் நிகழ்ந்த இவ்யசோதரசரிதத்தினை கூறலுற்றேன் என்றாரென்க.
நாதன் - அருகன்.
நம்முனி சுவ்வதன் எனவுமாம். முநிஸுவ்வதன்; முநிஸுவ்ரதன் என்ற வடமொழிச் சிதைவு.
முநிஸுவ்ரதர்
- ஸ்ரீவிருஷபதேவர்முதல் ஸ்ரீமஹாவீர தீர்த்தங்கரர் வரையிலுமுள்ள இருபத்துநால்வருள் இருபதாமவர்.
தீர்த்தம்-ஆகமோபதேசம்-ப்ரவசனம் எனவும் வழங்கும்.
தீர்த்தஞ்
செல்கின்றநாள் - ஆகமோபதேசமாகிய திருவறத்தை மக்கள் மேற்கொண்டு ஒழுகும் நாள்.
தீராவினை தீர்த்துத் தீ்ர்த்தந் தெரிந்துய்த்து‘ (சீவக. 1247) என்றார் திருத்தக்கதேவரும்.
தீர்த்தம் - தருமதீர்த்தம்; அறமாகிய
நீர். இதனை, (1) சம்சாரமாகிற
கடலி னின்றும் மோஷமாகிற கரையினை யேற்றுவிப்பதும், (2) ஆசையாகிற தாகத்தினை நீக்கக்கூடியதும்,
(3) பிறவிச்சுழற்சியில் இடைவிடாது சுழல்வதனாலேற்படும் சிரமத்தினைப் போக்கக்கூடியதும்,
(4) கர்மமாகிற மலத்தினை ப்ரக்ஷாளிக்கக்கூடியதும் ஆகிய இந்நான்கு விசேஷ குணாதிசயங்களையுடைய
பரமதீர்த்தம் என்று பிரவசனசாரம் உரைகூறுதல்காண்க. இனி, ஒரு தீ்ர்த்தங்கரர் முக்தியெய்தியபின்பும்மற்றொரு
தீர்த்தங்கரர் தோன்றி பகர்வதற்கு.
|
ஸ்ரீமதாரப்த தேவேந்த்ர மயூரானந்த நர்த்தனம் சுவ்ரதாம் போதரம்
வந்தேகம்பீரநயகர்ஜ்ஜிதம. (வா.தி.யசோ.4) |
|