| 122 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
வேண்டிய நிபந்தனைகளை
அரசர் அந்நாட்களில் அமைத்துவைத்தது, தம்
கீழ்வாழும் குடிகள் இனிது வாழும் பொருட்டே.
“ஆற்றரு
நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே“ |
“முன்னவனார்
கோயிற் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றுங்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துறைத் தானே“
-
இரண்டாந்தந்திரம் - 19 - திருக்கோயிலிழிவு - 3 - 4 |
என்ற திருமந்திரப் பிரமாணத்தான்
இதன் உண்மை அறிக. நமது தமிழ்
மன்னர்கள் நியோகித்த இக்கோயிற் பூசை நிபந்தங்களை இந்நாளிலும் நமது
ஆங்கில மன்னர் காலத்து வந்தது இக்கருத்துப்பற்றிப் போலும். ஆங்கில
மன்னர் Defender of the faith என்ற பட்டத்தைத் தாங்கி நிற்பதும் காண்க.
இந்நாளில் இந்நிபந்தங்களையும் கைப்பற்றுதல், வேறு காரியங்களுக்குப்
பயன்படுத்துதல் முதலிய செயல்களில் அரசாங்கத்தார் முந்துகின்றனர். இவை
அநீதமும், தகாத செயல்களும், உண்மையில் குடிமக்கட்குத் தீமை
பயப்பனவுமேயாம்.
துங்க ஆகமம்
- சிவாகமங்கள். இவை இருபத்தெட்டாம்.
சொன்ன முறைமையாவது
- நித்தம், நைமித்திகம், காமியம் என்ற
மூவகையோடு, அங்கங்களையும் கூட்டி (1) நித்தியம் (2) நித்தியாங்கம் (3)
நைமித்திகம் (4) நைமித்தியாங்கம் (5) காமியம் (6) காமித்தியாங்கம் என
ஆறுவகைப்படும். காரணம் பற்றாது என்றும் செய்வன நித்தம். நித்திய பூசை
முதலியன. ஒரு நிமித்தம்பற்றிச் செய்வன நைமித்திகம் என்பர். இவை
திருவிழா முதலியன. ஒரு குறிக்கோள், உட்கிடை, பெறும்படிச் செய்வன
காமியமாம். மேலும் இவற்றின் விரிவுகளைத் தக்கார்பாற் கேட்டுணர்ந்து
கொள்க.
மனு வேந்தன் அரசாயினான் - தோன்றினான் - (98)
காவலான் -
இயற்றினான் - (99) ஆக்கினான் - (100) ஆராய்ந்துளான் - (101) என்று
இப்பாட்டுக்களில் தொடாந்து கொண்டு பொருள் செய்க.
ஆராய்ந்தனன்
- என்பதும் பாடம். 16
| 102.
|
அறம்பொரு
ளின்ப மான வறநெறி வழாமற் புல்லி |
|
| |
மறங்கடிந்
தரசர் போற்ற வையகங் காக்கு நாளில்
சிறந்தநற் றவத்தாற் றேவி திருமணி வயிற்றின்
மைந்தன்
பிறந்தன னுலகம் போற்றப் பேரரிக் குருளை
யன்னான்.
|
17 |
(இ-ள்.)
அறம்...நாளில் - (மனுவேந்தன்) அறமும் பொருளும்
இன்பமும் என்ற இவற்றை அறநூல் வழியிலே தவறாமல் மேற்கொண்டு,
இவற்றிற்கு மாறாய மறங்களை (பாவ காரணங்களை) அழித்து, ஏனை
அரசர்கள் துதிக்கும்படி உலகத்தைக் காத்து வந்தார். அந்நாளிலே;
சிறந்த...அன்னான் - (அவர் புற்றிடங் கொண்டிருந்தவருக்கு ஆகமமுறையிலே
வேண்டு நிபந்த மாராய்ந்து) செய்த சிறந்த தவத்தின் பயனாக அவரது
தேவியின் அழகிய திருவயிற்றிலே இளஞ்சிங்கம்போல உலகம் போற்றுமாறு
மைந்தன் பிறந்தனன்,
|
|
|
|