Periya Puranam
(வி-ரை.)
அறம் பொருள் இன்பம் ஆன - அறமும், பொருளும்
இன்பமும் என்ற இம்மூன்றையும்; அறநெறி வழாமல்
- அறநூல் விதிப்படி
தவறாமல்; உறுதிப்பொருள் நான்கனுள் வீடு என்பது “பரனை நினைந்து
இம்மூன்றும், விட்டதே பேரின்ப வீடு“ என்றபடி இவைகளினின்றும்
விடுபடுவதாகும்; ஆதலின், அறநூல் வீடொழிந்த இம்மூன்றையுமே எடுத்துக்
கூறுவன. ஆசிரியர் பரிமேலழகர் திருக்குறள் உரைப்பாயிரத்துக் கூறியது
காண்க. பொருள் - அற வழியில் ஈட்டப்பெறுவது.
“மறத்தாறு கடந்த
செங்கோல் வழுதிநின் பொருள்களெல்லாம், அறத்தாற்றி னீட்டப் பட்ட
வனையவை புனிதமான...“ என்ற திருவிளையாடற் புராணம் (மண்சுமந்த
படலம்) காண்க. இன்பம் - அறத்தின் வழியே
நின்று அனுபவிக்கப்
பெறுவது. ஆகவே அறமும் பொருளும் இன்பமும் என்ற இம்மூன்றும் நூல்
வகுத்தவாறே செய்யவேண்டும் என்பார், அறநெறி ளழாமல் என்றார்.
அறநெறி வழாமல் புல்லி - நெறியினின்றும்
வழுவாமல்; பிறழாமல்
- தான் நெறி வழி வழாமற் றழுவி நின்று;
சிறந்த நல்தவம் - இது, இவ்வரசன் மேற்பாட்டிற்
கூறியபடி
சிவபெருமானை முன்னிட்ட தவத்திலே நின்றமை குறித்ததாம்.
“...
இம்மையே தரும் சோறுங் கூறையு மேத்த லாமிடர்
கெடலுமாம்
அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாது மையுற
வில்லையே“ |
என்று சுந்தரமூர்த்திகள்
திருப்புகலூர்த் தேவாரத்தில் உறுதியிட்டருளியபடி
இவ்வரசன் செய்த இத்தவம் இவ் வரும்பெறல் மகனைக் கொடுத்து இச்சரிதம்
நிகழ்வித்ததுமன்றி, வீதி விடங்கப் பெருமானை நேரே கண்டு தரிசிக்கும்
பேறும் கொடுத்து, வீடு பேற்றுக்கும் காரணமாயிருந்தது. மேலும்,
இத்திருத்தொண்டர் புராணத்திலே அடியார் திருக்கூட்டத்துடன் சேர்த்துப்
பாராட்டப்பெறும் பேற்றையும் தந்தது. இத்தவம் இவ் வுலக நிலையிலே புகழ்
தருதலாலே சிறந்தது எனவும், அவ் வுலக நிலையிலே வீடு தருதலாலே
நல்லது எனவும் ஆயிற்று என்பார்; சிறந்த - நல் - தவம் என்ற
அடைமொழிகள் புணர்த்திக் கூறினார். நல்வினையின் பயனாகவே நன்மக்கட்
பேறுண்டாகும்.
திருமணி வயிற்று
- இத்திரு மைந்தன் பிறக்க இடமாயிற்றாதலின்
அதனைத் திருவயிறு எனவும், மணிபோன்றான் பிறத்தலின் மணிவயிறு
எனவும் கூறினார். தேவி பெயர் “இரத்தினமாலை“ என்பர்; மைந்தன் பெயர்
“வீதிவிடங்கன்“ என்பர்.
மைந்தன்
- மைந்து (வல்லமை) உடையான் என்ற காரணத்தால்
மைந்தன் என்று சுட்டி யறிவித்தமைக் கேற்பப் “பேரரிக் குருலை யன்னான்“
என்றனர்.
உலகம் போற்ற - உலகம் இவனைப் பாராட்ட
என்றும், இவன்
உலகத்தைக் காப்பாற்ற என்றும் ஆம். 17
| 103.
|
தவமுயன்
றரிதிற் பெற்ற தனியிளங் குமர
னாளுஞ் |
|
| |
சிவமுயன்
றடையுந் தெய்வக் கலைபல திருந்த
வோதிக்
கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள்
கற்றுப்
பவமுயன் றதுவும் பேறே யெனவரும் பண்பின்
மிக்கான். |
18 |
(இ-ள்.)
தவம்...குமரன் - (மேலே சொல்லியவாறு சிவத்தை முன்னிட்ட)
தவஞ்செய்து பெற்ற ஒப்பில்லாத அரச இளங் குமரன்; நாளும்...ஓதி -
தினமும் முயற்சி செய்து சிவத்தை அடைவிக்கும் தெய்வக் கலைகள்
பலவற்றையும் திருந்தக் கற்றதனோடு; கவன...கற்று (தனது
குலத்துக்கேற்றவாறு) குதிரை,
|
|
|
|