166 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
136.
|
பூதநாயகர்
புற்றிடங் கொண்டவர் |
|
|
ஆதி
தேவ ரமர்ந்தபூங் கோயிலிற்
சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
முதெ யிற்றிரு வாயின்முன் னாயது. |
1 |
இது தேவாசிரியன் உள்ள
இடத்தைக் குறித்தது.
திருக்கூட்டச் சிறப்பு
- மேற்பகுதியிலே முடித்துக் காட்டிய
பூங்கோயிலிலுள்ள தேவாசிரியமண்டபத்திலே எழுந்தருளிய அடியார்
கூட்டத்தின் சிறப்பை உரைக்கும் பகுதி. இத்திருக்கூட்டத்தையே துதித்துச்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத்தொகை அருளினமையாலும்,
அத்தொகைபற்றியே இப்புராணம் எழுந்தமையாலும் இஃது நகரச்சிறப்பினை
அடுத்து உரைக்கப்பட்டது. இது பாயிரத்தின் பகுதியாவதும் இதனாலே
விளங்கும். இப்புராணத்தின் உள்ளுறையை இப்பகுதி குறித்ததாம்.
திருக்கூட்டம் - மற்றப் பிராணிகளின் தொகுதியை விலக்கி ஒருவருக்கு
மேற்பட்ட மக்கள் கூடுவதே கூட்டம் எனப் பெறும். அதனிலும்
“திருக்கோயில்“, “திருவாசகம்“ என்ற இடங்களிற்போல ‘திரு'
என்ற சிறப்பு
அடைமொழியாலே, இது, ஏனைய மக்கட் கூட்டத்தையெல்லாம் விலக்கிச்,
சிறப்புடைய சிவனடியார் கூட்டத்தையே குறிக்கும். ‘திரு' என்பது ‘சிவமே
பெறுந்திரு' என்றும் பொருள் தரும். “நின்னன்பருள்ளாஞ் என்பது ‘சிவமே
பெறுந்திரு' என்பது திருவாசகம். சிவத்தைத் தம் உள்ளத்தில் நிறுத்தி
வழிபடும் அடியார் கூட்டமே திருக்கூட்டமாம்,திருக்கூட்டம் சீவன்முக்த
நிலையிலும் இன்றியமையாதெனச் சாத்திரம் பேசும். “தம்மை விடுத்து, ஆயும்
பழைய வடியாரொடுங் கூட்டித், தோயும் பரபோகந்துய்ப்பித்து“ எனவரும்
குமரகுரபரரது திருவாக்குக் கருதத்தக்கது. “பழைய வடியாரோடுங் கூடாதென்
னாயகமே பிற்பட்டிங் கிருந்தேன்“ என்பது திருவாசகம். அவரது சிறப்பு -
அவர்களுக்கே உரிய பெருமைக் குணங்கள்.
(இ-ள்.)
பூதநாயகர்...கோயிலில் - பூத நாயகராகியும், புற்றில்
இடங்கொண்டு வீற்றிருப்பவராயும், ஆதிதேவராயும் உள்ள இறைவன் விரும்பி
எழுந்தருளியிருக்கும் பூங்கோயில் என்னும் திருவாலயத்திலே; சோதி ...
முன்னாயது - விளக்கம் மிகுந்து பேரழகும் பேரொளியும் பொருந்திய
திருமுற்றத்திலே மதிலின் திருவாயிலினை அடுத்து முதலில் உள்ளது
(தேவாசிரியன்);
(வி-ரை.)
“தேவாசிரியன்“ என்னும் வரும் பாட்டிலுள்ள எழுவாய்
இப்பாட்டிற்கும் பின்னர் மூன்றாவது திருப்பாட்டிற்கும் இடையிலே,
சிங்கநோக்காக அமைந்து முன்னும் பின்னும் சென்று, தேவாசிரியன் -
முன்னாயது - போல்வது என இசைவதாம். மேலும் கீழும் உள்ள உலகங்கள்
சேரும் இடம் என்பது குறிப்புப்போலும்.
பூத நாயகர் - பூதகணங்களின் தலைவர்.
“பூதபதயே நம“ என்பது
சிவ அட்டோத்தர வாக்கியம். இப்பூதங்களின் வலிமையும் சிறப்பும் முன்னர்
வரிசை 16-வது திருப்பாட்டிலும் பிறவிடத்தும் பேசப்பெற்றது. அடியார்களே
சிவகணங்களாவர்; ஆதலின் அடியவர் கூட்டம் பூதபரம்பரை எனப்படும்.
“பூதபரம்பரை பொலிய“ என்ற (திருஞான - புரா - 1) திருவாக்குங் காண்க.
இது திருக்கூட்டச் சிறப்புக்கூறும் பகுதியாதலின் அத்திருக்கூட்டத்தின்
தலைவர் என்பது தோன்ற முதலிலே “புதநாயகர்“ என்று கூறினார்.
|
|
|
|