| தடுத்தாட்கொண்ட புராணம் | 167 |
Periya Puranam
புற்றிடங்
கொண்டவர் - வன்மீகநாதர். புற்றை இடமாகக் கொண்டு
அதில் விளங்குபவர். இவரே “திருவாரூர்த் திருமூலட்டானனார்“,
“திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன்“ என்பனவாதி
தேவாரங்களால் துதிக்கப் பெறுபவர். புற்றிடங்கொண்டு இறைவன்
எழுந்தருளிய காரணத்தாலே இது பிருதிவித் தலமாதலின் இச்சிறப்பை
அடுத்துக் குறித்தவாறு.
ஆதி தேவர்
- வரிசை 132 பாட்டிற் கூறிய ‘யார்க்கும் முன்னவன்'
என்ற கருத்துப் பற்றியது.
சோதி மாமணி நீள் சுடர் மூன்றின் - மாமணி
- பேரழகு.
நீள்சுடர் - பேர் ஒளி. சோதியே! சுடரோ!! சூழ் ஒளிவிளக்கே!!! என்ற
திருவாசகம் இங்கே நினைவுகூரத்தக்கது. மணிகளின் ஒளிபரப்பும் திருமுற்றம்
என்பாருமுளர். திருமுற்றமாவது தன்னியல்பிலே பிரகாசிப்பதாம்.
அதிற்கிடக்கும் மணிகள் பருக்கைக் கற்களோடு ஒப்பஎடுத்து ஏறியத்தக்கன
என்று அப்பர்சுவாமிகள் புராணத்தால் அறிகின்றோம். இல் + முன் - என்றது
மூன்றில் என வந்தது.
எயில்
- மதில். மூதெயில் - பழமையான மதில் என்க
-
தொன்னகரத்தின் தொல்போயில் ஆதலின் அதற்கேற்ப எயிலையும் மூதெயில்
என்றார். ‘தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்' என்ற திருவாக்குங் காண்க.
மூதெயில்...முன்னாயது - மதில் திருவாயிலை
அடுத்து முன்புறம்
உள்ளது. திருவாயிலைக் கடந்து உட்சென்றவுடன் காணப்பெறுவதும், தரிசிக்க
வேண்டுவதும் இதுவாம், என்பார் முன் ஆயது என்றார்.
முன்னானது
- என்பதும் பாடம். 1
| 137.
|
பூவார்
திசைமுக னிந்திரன் பூமிசை |
|
| |
மாவா
ழகலத்து மான்முதல் வானவர்
ஒவா தெருவரு நிறைந்துறைந் துள்ளது
தேவா சிரிய னெனுந்திருக் காவணம். |
2 |
தேவாசிரியன் என்ற பேர்க்காரணத்தைக்
குறித்தது
(இ-ள்.)
பூவார்..வானவர் - தாமரையில் இருக்கும் பிரமதேவனும்,
இந்திரனும், இலக்குமியைத் தன் மார்பின்மீது வைத்திருக்கும் விட்டுணுமூர்த்தி
முதலிய தேவர்களும்; ஓவாது...காவணம் - எல்லாரும் நீங்காது நிறைந்து
உறைவதற்கு இடமாயுள்ளது ‘தேவாசிரியன்' என்னும் பெயருடைய
திருமண்டபமாம்.
(வி-ரை.)
பூவார் திசைமுகன் - பூவார் - பூ + ஆர் - பூவில்
பொருந்திய. தாமரைப் பூவைத் தான் இருக்கும் ஆசனமாகக் கொண்ட.
“பூவாய பீடத்தான்“ - தேவாரம். பூ என்ற பொதுப் பெயர், வேறு
அடைமொழியில்லாத போழ்து சிறப்புப்பற்றிப் பூக்களிற் சிறந்ததாகிய
தாமரையையே குறிக்கும் - பின்னர் ‘பூமிசை' என்பதையும் இவ்வாறே
கொள்க.
திசைமுகன் - திசைக்கு ஒவ்வொன்றாக
நான்குதிசைக்கும் நான்கு
முகங்கள் கொண்டவன். நான்முகன் - பிரமன்.
பிரமதேவன், தான்படைத்த
திலேத்தமை என்னும் பெண்ணின் அழகைக் காண்பதற்காக நான்கு
திசைகளிலும் நான்கு முகங்களைப் பெற்ற கதை புராணங்களுட் கேட்கப்
பெறும்.
|
|
|
|