| தடுத்தாட்கொண்ட புராணம் | 175 |
Periya Puranam
உருத்திராக்கமணி;
உருத்திரமூர்த்தியினுடைய கண்ணினின்றும்
தோன்றியது. ஆதலால் உருத்திர - அக்க - மணி என்பர். மாசிலாத நீறு
என்று கூட்டி உரைப்பதும் ஒன்று. இதன் விரிவைப் பின்னர்
திருஞானசம்பந்தசுவமிகள் புராணம் - 764-ம் திருப்பாட்டின் கீழ்க்காண்க.
நீறுபோல் - மேலே பூசும் நீற்றின் புனிதம்
போல் என்க. “சுத்தம தாவது
நீறு“ - தேவாரம். நீற்றின் தன்மைகளை முன்னர் வரிசை 138-வது
பாட்டின்கீழ்க் காண்க.
உள்ளும் புனிதர் - எச்ச உம்மை. திருநீற்றின்
புனிதத் தன்மையை
உய்த்துணர வைத்ததாம்.
தேசினால் எத்திசையும் விளக்கினார் - (உட்புனிதராகையால்)
தேசு - மனத் தூய்மையாலும் அருளினாலும் உண்டாகும் ஒளி. “ஐந்துமாறு
அடக்கியுள்ளார் அரும்பெருஞ் சோதி“ என்று பின்னர்க் கூறுவதுங் காண்க.
நீற்றின் தேசு என்பாருமுளர்.
பேசவொண்ணாப் பெருமை
- “அளவில்லாத பெருமையர்“ என்று
பாயிரத்திற் கூறியதின்கீழ்க் காண்க. இங்குத் திருநீற்றினாலும்,
உட்புனிதத்தாலும் உளதாம் பெருமை. இது அளவிடற்கரியதாதலின் “பேச
வொண்ணாப் பெருமை“ என்றார்.
|
“பேணியணிபவர்க்
கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு“
|
என்பது தேவாரம்.
பெருமை பிறங்கினார்
- பெருமையிலே விளங்குகின்றவர்கள்.
இவ்விரண்டு பாட்டுக்களில் முதற்பாட்டு அகப்பெருமையும்,
இரண்டாம்
பாட்டுப் புறப்பொலிவையும் விளக்கியதாம். 6
| 142.
|
பூத
மைந்து நிலையிற் கலங்கினும் |
|
| |
மாதொர்
பாகர் மலர்த்தாண் மறப்பிலார்
ஒது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார். |
7 |
(இ-ள்.)
பூதம்....மறப்பிலார் - (இறைவன் ஆணைவழியே நிலைபெற்ற)
ஐம்பெரும் பூதங்களும் தம் நிலையிற் கலங்கின காலத்தும் (தமது நிலை
கலங்காது) உமாதேவியாரை ஒரு பாகத்து வைத்த சிவபெருமானது மலர்
போன்ற பாதங்களைத் தம்மனத்தில் மறத்தலில்லாதவர்கள்; ஒது...நின்றார்
-
பெரியோர்களால் விதந்து எடுத்து ஒதப்பெற்ற அன்பின் திண்மையினாலே
அவ்வழியிலே பிறழாது நிலை நின்றவர்கள்; கோது இலாத குன்றனார்
-
குற்றமற்ற குணமலை போன்றவர்.
(வி-ரை.)
பூதமைந்து நிலையிற் கலங்கினும் - உலகம் உயிர்
பெற்று (உயிர்ப்பு - மூச்சு) இருக்கும்படி அமைந்த காற்றானது தன்னிலையின்
மிக்குப் பெருங் காற்றாக வீசி உலகத்தை அழித்தல்; இவ்வாறே மற்றப்
பூதங்களும், பெருந்தீ, பெரும் வெள்ளம் முதலியனவாக மாறி அழிவு
செய்தல்.
இனி இதற்கு இவ்வாறன்றிச் சங்காரத்தில் அந்தந்தப்
பூதங்கள்
அவ்வவற்றிற்குரிய தன்மாத்திரையில் ஒடுங்கவும், இவ்வாறே சென்று
அனைத்தும் மாயையில் ஒடுங்கவும், உள்ள காலத்தும் - என்றும்
பொருள்கூறுவர். பிருதிவி - தனது மண் என்ற
உருவநிலைமாறித் தனது
நாற்றம் எனும் தன்மாத்திரையில்ஒடுங்கும். இவ்வாறே பிறவுமாம். இதனையே
இந்நாள் விஞ்ஞான சாத்திரிகள் (Atoms - electrons) அணு - பரமரணு
முதலியனவாய்ப் பகுத்துக் கூறுவர். நீர்ப்பெருக்கு மண்ணை நிலை கலக்கும்;
அவ்வாறே நீர்ப்பெருக்கை வடவைத்தீ சுவறச் செய்யும்; அதனைச்
சண்டமாருதம் அவித்துப் பின்னர் அம்முறையே அது முடிவில் ஆகாய
(வியாபகம்) நிறைவுக்குள்ளே ஒடுங்கும்; இவ்வாறு தத்தம் நிலைகளிற்
பூதங்கள் கலங்கின காலத்தும் தாம் கலங்காது இறைவன் பாதங்களை
மறவாதவர் என்பது இப்பொருளிற் கண்டது.
|
|
|
|