தில்லைவாழந்தணர்சருக்கம் | 185 |
Periya Puranam
டத்தொகை யருளிய
சிறப்பு என்றாவது பெயரிடாமல் பெயரிட்டனர். இதுவே
இதனால் அறியும் சிறந்த கற்பனை என்பது 62-ம் பக்கத்திலே
உரைக்கப்பெற்றது.
இப்பகுதியிற் கூறப் பெறும் பொருள் இப் பெயரினால்
விளங்கும். இதன்
வரலாற்றுத் தொடக்கத்தைத் திருமலைச் சிறப்பு 28-வது திருப்பாட்டில்,
“செய்ய
சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையன் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்யென“ |
என்பதிற் காண்க. ஆணையின்
வழி உலகத்தில் அவதரித்த ஆலால சுந்தரர்
உலக வழியில் செல்லாது அருள் வழியிலே சென்று நமக்கு வழிகாட்டியாகி
விளங்கும் நிலைமைக்கு இறைவன் அவரைத் தடுத்து ஆட்கொண்டதே
காரணமாகும். ஆதலின் இதனை ஆசிரியரும் முதற்பாட்டிலே குறித்தமையும்
காண்க.
147.
|
கங்கையு
மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல்
வைத்த |
|
|
வங்கண
ரோலை காட்டி யாண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைக ணாடுந் திருமுனைப் பாடி
நாடு.
|
1 |
(இ-ள்.)
கங்கையும்.........தமக்கு நாடு - கங்கை, நிலா, பாம்பு, கொன்றை
என்ற இவற்றைத் தம்முடியிலே வைத்த சிவபெருமானால் ஆளோலை காட்டி
வலிய ஆட்கொள்ளப்பெற்றவராகிய ஆலாலசுந்தரர்க்கு (ஆணைவழியே
இவ்வுலகில் அவதரிக்க) உரிய நாடாவது; மங்கையர்.......திருமுனைப்பாடி நாடு
- பெண்களின் குளிர்ந்த சந்திரன் போன்ற முகங்களிலே இருபக்கமும்
ஓடிச்சென்று சிறந்த கயல்மீன்கள் போன்ற கண்கள் காதிலணிந்த குழைகளை
நாடிச் செல்லும் அழகிய பெண்கள் வாழும் திருமுனைப்பாடி நாடு என்பதாம்.
(வி-ரை.)
வதன மதியில் செங்கயல் குழைகள் நாடும் மங்கையர்
வாழும் திருமுனைப்பாடி நாடு என விரித்துக் கூட்டுக.
கங்கையும் மதியும் பாம்பும்
கடுக்கையும் - இறைவன் திருமுடியிற்
றரிப்பன.
அங்கணர் - அம்+கண்ணர்
- அழகிய கண்ணையுடையவர். கண் -
கருணைக்கண். வரிசை 39-ம் பாட்டின் கீழ்க்காண்க. அங்கணர் ஆதலின்
ஆண்டவர் என்பது குறிப்பு. இவ்வாறு ஆண்டது திருக்கயிலாயத்திலே
போந்த அருட்செய்தியின் தொடர்ச்சி என்று காட்டுவார் அப்பாட்டிற் கூறிய
அப்பெயராலே இங்கும் கூறினார்.
கங்கை
- உலகம் வாழ்வடையும் பொருட்டுக் கங்கையைத் தரித்து
வானிலிருந்து இவ்வுலகில் ஆறாக உலவ வைத்ததுபோற் கயிலையிலிருந்து
ஆலால சுந்தரரை உலகில் வந்து அவதரிக்கச் செய்து உலகை வாழ்விக்கச்
செய்த சரிதக் குறிப்பாம்.
மதியும் பாம்பும்
- “பாம்போடு திங்கள் பகைதீர்த்து ஆண்டு“ ஒரு
சேர வைத்ததுபோல் பரவையார் சங்கிலியார்களின் ஊடல் தீர்த்து
ஆலாலசுந்தரருடன் வைத்த சரிதக் குறிப்பு.
கடுக்கை
- கொன்றை, பிரணவ உருவமுடையதாதலின் மந்திர
சொரூபமாகிய திருத்தொண்டத்தொகையாதி தேவாரங்களை உலகிலே
தோற்றுவிக்கச் செய்யும் பேருபகாரம் என்ற குறிப்பும் பெறுகின்றோம்.
ஓலைகாட்டி ஆண்டவர்
- இப்பகுதியிற் கூறும் சரித உட்குறிப்பும்
முற்குறிப்புமாம். ஆண்டவர் - ஆளப்பெற்றவர்
- செயப்பாட்டுவினைப்
பொருளில் வந்தது.
ஆண்டவர் தமக்குநாடு
- அவருக்கு அவதார உரிமையான
நாடாகியது. ஓலைகாட்டி ஆண்ட செய்தி பின்னர் உரைப்பாராயினும் அது
இப்புராணம் பாடு
|
|
|
|