184 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
கற்பனை
:- (1) சிவபெருமானைப் பணிபவர்களே உலகத்தை
ஆளற்குரியவர்கள். இவர்களைச் சரணடைந்து இவர்களது வழி நிற்றலே
உலகத்தார் உய்வதற்கு ஏற்ற வழியாம். இதை உலகம் பின்பற்றி நடந்து
உய்வதாக. மும்மையாலுலகாண்ட மூர்த்தி நாயனார் புராணம் காண்க.
(2) கைத் திருத்தொண்டு செய்தலும் விபூதி உருத்திராக்கம்
அணிதலும்
தொண்டர்களுக்கு வேண்டப் பெறுவன.
(3) எத்தகைய கலக்கம்வரினும் மனம் திரியாது - கலங்காது
-
சிவபெருமானை மறவாது கைத் தொண்டொழுகிய அன்பின் நெறியிலே ஒரு
சிறிதும் பிறழாது நிலை நிற்க வேண்டும் என்பது அடியார்கள் சிறப்பிலிருந்து
தெரிந்து ஒழுகவேண்டிய பெரிய கற்பனையாம். இதனைத் தாம்தாம் கொண்ட
உலகநிலையிலே வைத்து ஒழுகுபவர் பலர். ஆனால் இறைவனிடத்துத்
தொண்டு செய்யும் வழியைக் கைக்கொள்ளாமலும், சமயம் போல மாற்றியும்,
கைவிட்டும் ஒழுகுவர். இறைவனிடத்தே பதித்த அன்பு நெறியில் உறைத்து
நின்று ஒழுகுவதே மக்களுக்கு நன்மை தருவதாம். மற்ற
உறைப்புக்களெல்லாம் இவ்வாறாகா.
(4) ஓட்டையும் செம்பொன்னையும் ஒன்றுபோலவே பார்க்கும்
மனநிலையில் உலகத்தார்கள் பயின்று வருதல் நன்மை தரும். இதுவே உலகப்
போராட்டங்கள் எல்லாவற்றிற்கும் மருந்துமாம்.
(5) எளிய வாழ்க்கையும், இறைவனிடத்து அன்பினால்
வந்த வீரமும்,
ஒன்றும் குறைவில்லை என்ற மன நிறைவும் எல்லாரும் அறிந்து பின்பற்றிப்
பயன் பெறத்தக்க குணங்களாம்.
திருக்கூட்டச்
சிறப்பு முற்றும்.
|
தடுத்தாட்கொண்ட புராணம்
- இறைவன் நம்பியாரூரரைத் தடுத்து
ஆளாகக் கொண்ட செய்தியை உரைக்கும் பகுதி. திருமலையிலே இரு
சேடியரைக் கண்டது காரணமாக ஆணையின் வழி இங்கு அவதரித்தனர்.
ஆலாலசுந்தரர். இதுதூல காரணம்; தென்றிசைவாழ்வும்
திருத்தொண்டத்தொகை தரவும் அவ்வாறு அந்த இரு மாதர்மேல்
மனம்போக்கினர் என்பது அவர் அவதரிக்க நேர்ந்ததன் சூக்குமகாரணம்.
இந்தக் காரணங்களின் வேறாக, அதாவது செய்யப்போன கருமங்களின்
வேறாய், இதர ஆகாமிய வினைகள் தேட நின்றபோது தடுக்க - என்று
சுந்தரர் வேண்ட, இறைவன் அவ்வாறே அருளினர் என்று மேலே கண்டோம்.
இப்பகுதியிற் கண்ட புத்தூர்ச் சடங்கவியார் மகள் இவ்விருசேடியரினும்
வேறானவர் ஆதலின் அந்த வரத்தின்படியே இறைவன் வந்து அந்த
மணத்தைத் தடுத்துச் சுந்தரரைத் தமது ஆளாகக் கெண்டனர். (28 ம் பாட்டு)
இவ்வரலாறு இப்பகுதியிற் கூறும் சிறந்த பொருள். இப்பகுதியிலே பரவையார்
திருமணமும், திருத்தொண்டத் தொகை அருளிச்செய்தலும் கூறப்பெறுவன.
இவை சுந்தரரது அவதாரக் காரணங்களாயினும் இவை நிகழ்வதற்கு வழி
செய்து முன்னர் நிகழ்ந்ததாலும் இது மக்கள் கற்கவேண்டிய சிறந்த கற்பனை
யாதலாலும் இதற்குப் பரவையார் திருமணச் சிறப்பு என்றாவது, திருத்தொண்
|
|
|
|