பக்கம் எண் :


428 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
அநுபந்தம்

336-ம் பாட்டின் பின் இதன்கீழ்க் குறித்த பாட்டுக்கள்
இடைச்செருகலாய்த் திருநெல்வேலியிற் கிடைத்த சில
பிரதிகளிலிருக்கின்றன.
(பக்கம் 455)

     1. வன்றொடர் காதல் கண்டு மழவிடை யுகைத்த நாதர், முன்றொண்ட
ராக வாண்ட முதனம்பி யாரூ ரர்க்குச், சென்றங்குப் பேறு மிக்க
திருத்தொண்டர் தம்பாற் சேர, வொன்றும்பண் டருள வேண்டி
யொருதொண்ட ரருளிச் செய்தார்.

     விடையுடையார் தாமும - சென்றங்கு போற்று - தொண்டர் வெகுளச்
செய்தார் - என்பன பாடபேதங்கள்.

     2. பெருந்தவத் தொண்ட ரான பெருவிறன் மிண்ட ரென்பா, ரிருந்தவக்
குழாத்தி னின்று மெதிர்செயிர்த் தெழுந்து நின்றே, யருந்தவப் பெரியோர்
தம்மைப் பணிந்தனை யாது போன, வருந்தவ றுடைய வேட மற்றிவ
னார்கொ லென்று.

     வேறு 3. பக்க மேவரு வார்கள் பலருடன், புக்க போது பொருவிறன்
மிண்டர்தா, மிக்கெழுந்த வெகுளியா னம்பிபாற், றக்க வல்லன சாலவுஞ்
சொல்லினார்.

     4. சொன்ன தொண்டரை நோக்கிமெய்த் தொண்டரால், மன்னி நீடி
வளர்பெருங் கூட்டத்து, முன்னி ருந்தா ரொருவர் மொழிகின்றா,ரின்ன
சொல்ல இயல் பல வாமென்று. நீடு - பாடபேதம்.

     5. ஓலை காட்டி யுடையவர் முன்னின்று, ஞால முய்யவாட் கொண்டரு
ணம்பியைச், சீல மும்மறி யாதிவை செப்பினீர், கோல மேகண்டு கூறலா
மோவவென்றார்.

     ஞாலமேற்க - பாடபேதம்.

     6. என்று கூற விகழ்ந்து லிறன்மிண்டர், நன்று சாலவு நம்பெரு
மக்கள்வந்தொன்று கூட்ட முணரா வொருவனை, யன்று தம்பிரா னாள்வ
தழகிதால்.

     7. கருந்த டங்கண்ணி பங்கர்தங் காதல்சூ, ழருந்த வத்தடியாரை
யணைவின்றிப், புரிந்த பண்பினிற் றூர்த்தன் புறகெனா, விருந்த தொண்டர்
திருக்கதை சாத்துகேன்.

     திருக்கை சாற்றும் என - திருக்கதை சாத்துமேன் - என்பன
பாடபேதங்கள்.

     8. வெம்பி நீர்மொழி யேல்விறன் மிண்டரே, நம்பியா ரூரர் தாமுமந்
நாயனார், அம்பொன் மாளிகை யாரூ ரமர்ந்தரு, டம்பி ரரன்றோழ னாரவர்
தாமென.

     நம்பியாரூரர் காணும - பாடபேதம்.

     9. தோழ ராயினுந் தொண்டரே யாயினும், ஆழி மாலயன் காணா
வருட்கழவ், சூழு மெய்யடி யாரைத் தொடர்வின்றி, வாழு மூரன் பிரானாக
வைத்திலம்.

     சூழ - பிரானாதல் - என்பனவும் பாடபேதங்கள்.

     10. இன்ன வாறடி யார்புற கென்றுபி, னன்ன வாறறிந் தஞ்சியா
ரூரர்தா, மின்னு வார்சடை வேதியன் றாடொழப், பொன்ன வாமணிப்
பூங்கோயில் சார்தலும்.

     என்றபின் - பாடபேதம்.

     11. பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவ, ரங்கு காட்சி
கொடுத்தருளாமையினிங்கும் மேறெனக் கிவ்வண்ண மோவென்பா,
ரெங்குந் தேடி யழிவுற் றியம்புவார்.

     12. என்னை யாட்கொண்ட வீசனு மாயெனக், கன்னை யாயறி
வாயமுதாயினாய், பொன்னை யார்ந்த புரிசடைப் புண்ணியா, வுன்னை
யானிங்குக் காணேனொளித்தியோ.

     13. வெள்ள நீர்பரந் தோங்கும் விரிசடை, வள்ள லேமலை யாள்மண
வாளனே, தெள்ளு மாமறை யின்றெளி வாகியெ, னுள்ள மேபுகுந் தாயிங்
கொளித்தியோ.

     14. ஈச னேயெனக் கெய்ப்பினில் வைப்பெனப், பேச லாகும்
பெரும்பொருளாயினாய், தேச னேசிவ னேசிவ லோகனே, நேச
னேயெனை யானுண ரேனென்று.

     15 தோழ ராகிநற் சுற்றமு மாயடி, நீழ றந்தளிப் பாயெதிர் நீங்கவு,
மாழியொன்ற வடியார் முனியவும், வாழி வன்றொண்டர் சால வருந்தினார்.

     எதிர் நீங்கவும - ஆழி போன்ற - என்பன பாடபேதங்கள்.

     16. வேண்டி யாட்கொண் டவனுடைத் தொண்டரை, யாண்ட நாயகர்
வாவென்றருள்செய்து, காண்ட கும்படி காட்சி கொடுத்தலும், பூண்டு
கொண்டவர் பொன்னடி யேத்துவார்.

     கொண்ட வீறுடை - நாயகர் அவர் - அடி பேற்றுவார் - என்பன
பாடபேதங்கள்.