பக்கம் எண் :


430 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Untitled Document
     தில்லைவாழந்தணர் சருக்கம் :- திருத்தொண்டத் தொகையில்
“தில்லை வாழந்தணர்“ என்று தொடங்கும் பாசுரத்திற் போற்றப் பெற்ற
அடியார்களது வரலாறுகளைக் கூறும் பகுதி. அப்பாசுரம் மேலே தரப்
பெற்றது. அவ்வடியார்களாவார், தில்லைவாழந்தணர், திருநீலகண்டர்,
இயற்பகையார், இளையான்குடி மாறர், மெய்ப்பொருளார், விறன்மிண்டர்,
அமர்நீதியார் என்ற எழுவர். இவ்வெழுவர்களின் வரலாறுகள் இம்முறையிலே
இச்சருக்கத்துட் பேசப் பெறுகின்றன. பின் வரும் சருக்கங்களின் அடைவும்,
அவ்வச்சருக்கங்களினுட் பேசப்பெறும் அடியார் புராணங்களினடைவும்
இவ்வாறே கண்டுகொள்க. இனி மும்முறையே இச்சருக்கத்து முதலில்
ஆசிரியர் தில்லைவாழந்தணர் புராணங் கூறத் தொடங்குகின்றார்.

     தில்லைவாழந்தணர் புராணம் :- திருத்தொண்டத் தொகையிற்
றுதிக்கப்பெற்ற தில்லைவாழந்தணர் என்போரது தன்மைகளைக் கூறும்
பகுதி. இப்பெயர் திருத்தொண்டர் சீர்புராணம் என்று சில பிரதிகளில்
உள்ளது. இதற்குத் தொகை வகை நூல்களாகிய, முதனூல் வழிநூல்களாகிய
திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதிகளின் பகுதிகள்
தலைப்பிற் றரப்பெற்றன. இவ்வாறே பின்னருங் கண்டுகொள்க.

     தொகை :- முதனூல். இது திருவாரூர்த் தியாகேசர் திருவாக்கு.
தில்லையில் வாழும் அந்தணர் தமது அடியார்களுக்கும் நான்
அடியேனாயுள்ளேன் என்பது.

     வாழந்தணர் - வினைத்தொகை. இவர்கள் பண்டு மின்று மென்று
முள்ளா ராதலின் முக்காலத்தும் வரும் வினைத்தொகையாற் கூறியவாறு.
தம்அடியார் - தமக்கே உரிய அடிமை செய்பவர். அடியார்க்கும் - உம்மை
எச்சவும்மை. அந்தணர்க்கேயன்றி அடியார்க்கும் என்க. அந்தணரது இயலும்,
அவர் அடியாரியலும் புராணத்துள் வேறு வேறு விரித்திருத்தல் காண்க.

     வகைநூல் :- முதனூலிற் கண்ட தில்லை என்றது வகைநூலிற்
“செப்பத் தகுபுகழ்த் தில்லைப்பதி“ எனவும், விரி நூலுள்ளே “போதியோ
நிற்குந் தில்லை“,