2.
திருநீலகண்ட நாயனார் புராணம்
|
திருநீல
கண்டத்துக் குயவனார்க் கடியேன் |
-
திருத்தொண்டத்தொகை |
சொல்லச்
சிவன்றிரு வாணைதன் றூமொழி தோணசையை
யொல்லைத் துறந்துரு மூத்ததற் பின்னுமை கோனருளால்
வில்லைப் புரைநுத லாளொ டிளமைபெற் றின்பமிக்கான்
தில்லைத் திருநீல கண்டக் குயவனாஞ் செய்தவனே |
-
திருத்தொண்டர் திருவந்தாதி
|
360.. |
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து
வந்தார்
மாதொரு பாக நோக்கி மல்குசிற் றம்ப லத்தே ஆதியு முடிவு மில்லா வற்புதத் தனிக்கூத்
தாடு நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடு நலத்தின் மிக்கார்; |
1 |
புராணம்
:- திருநீலகண்டம் என்ற பெயரோடுங் கூடிய நாயனாரது சரித
வரலாறும் பண்புங் கூறும் பகுதி. இங்குப் புராணம் என்பது சருக்கத்தின்
உட்பகுதியைக் குறித்து நின்றது. திருத்தொண்டத் தொகையிற் கண்டவாறே
நிறுத்த முறையிலே தில்லைவாழந்தணர் சருக்கத்தில் இரண்டாவது
திருநீலகண்டத்துக் குயவனார் சரிதம் கூறத் தொடங்குகின்றார்.
|