தொகை
:- திருநீலகண்டத்துக் குயவனார் - திருநீலகண்டம் என்ற
பெயரையே தமது பெயராகக் கூடியவரும், குயவர் குலத்திலே வந்தவரும்
ஆகிய பெரியார். இது அவருக்கு உலக வழக்கில் வழங்கிய காரணப்பேர்.
ஆதலின் அதனை விளக்குதற்குக் கண்டத்துக் குயவனார் என அத்துச்
சாரியை புணர்த்தி யோதியருளினார்.
இப்பேர் வந்த காரணம் 363 - 366 பாட்டுக்களிற்
காண்க.
நாயனாரது இயற்பேர் வேறு. மரபும், பெயர்வந்த காரணமும்,
சரிதக்குறிப்பும் திருத்தொண்டத் தொகையாகிய முதனூலிற்
குறிப்பிட்டவாறு கண்டுகொள்க.
வகை :-
“சிவன்றிருவாணை“ - அண்ணலாராணை
- 403. தன்
தூ மொழி தாம் ஆர்வம் வைத்து எப்பொழுதும் போற்றிச் சொல்லி வந்த
மொழி என்ற பொருளும் பெற நின்றது; தன் தூமொழி - மனைவியர்.
தூமொழி சொல்ல என்றும், தூமொழி தோள் என்றும் ஈரிடத்தும் இயைக்க.
ஒல்லை - ஆணை கேட்டவுடன்; திருவாணை உய்த்த
வகையிலே மூப்பு
வருங்காறும் மனைவியின் இன்பத்தையேயன்றி, வேறு எந்த மாதரின்
ஆசை நினைவையும் துறந்தனர் எனவும், திருவருளால் மீளவும் இளமை
பெற்றனர் எனவும், அவர் தில்லையில் வாழ்ந்தனர் எனவும் சரிதங்
குறித்தவாறு காண்க. “திருநீலகண்டக் குயவன்“
- முதனூல் ஆட்சி.
360. (இ-ள்.)
வேதியர்....வந்தார் - மேலே விரித்துச்
சொல்லிய
அந்தணர்கள் வாழ்கின்ற தில்லை என்கின்ற தொல்பெரும் பதியிலே
அவதரித்தவர்; மாது..........மிக்கார்
- உமையம்மையா ரமர்ந்த ஒரு
பாகத்தை நோக்கிக்கொண்டு, நிறைந்த திருச்சிற்றம்பலத்தி னிடமாக
நின்று, ஆதியுமந்தமுமில்லாத அற்புதத் தனித் திருக்கூத்தினை ஆடுகின்ற
இறைவனது திருவடிகளையே போற்றி வழிபட்டு வருகின்ற
நல்லொழுக்கத்திலே தலைசிறந்தவர்.
(வி-ரை.)
வேதியர் தில்லை மூதூர் - நாயனாரது
சரிதத்திற்குரிய
நாட்டுச் சிறப்பும், நகரச்சிறப்பும், அதன் குடிச்சிறப்பும் உரைத்ததுடன் முன்
புராணத்திற் கூறிய பொருளைத் தொடர்ந்துகொண்டு அந்த வேதியா என
அனுவதித்து எடுத்துக்கொண்டதுமாம். மூதூர் - பழம் பதி.
வேட்கோவர்
- குயவர். மண்ணிலே குல உரிமைத் தொழில்
செய்பவர் என்பது பொருள்.
மாதொருபாக நோக்கி
- அம்மையார் இருக்கும் இடப்பாகத்தைத்
திருவருளினாலே நோக்கம்செய்து கொண்டு. நோக்கி ஆடும் நாதனார்
என முடிக்க. “வலப்பானாட்டமிடப் பா னோக்க“
என்பது
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (1). நோக்குதல்
- அருளினை
அம்மையார் வழியே உயிர்க்குழவிகள் பெற்றுய்யும்படி பார்த்தல்.
ஒரு பாகம் - ஏற்புழிக்கோடல் என்ற விதியால் இங்கு இடப்பாகம்
என்று கொள்க.
மல்கு சிற்றம்பலம்
- எங்கும் - என்றும் நிறைவுற்ற ஞானாகாயம்.
ஆதியும் முடிவுமில்லா
- இன்னகாலத்திலே, இன்ன இடத்திலே
தோன்றிற்று - முடிவுபெறும் என்பதில்லாத - காலத்தையும் இடத்தையும்
கடந்த. ஆதியுமுடிவு மில்லாத கூத்து - என இயையும்.
கூத்து
- ஐந்தொழிற் றிருக்கூத்து. இது என்றும் நித்தியமாய்
உள்ளது. “திகழ்பதியாம் ஈசனது நடத்தொழிலும்....அனாதி“ என்றனர்
உமாபதி சிவாசாரியார்.
ஆதயு முடிவு மில்லா
நாதனார் - என்று கூட்டியுரைத்தலுமாம்.
அற்புதம் - தனி - என்பன கூத்திற்குரிய
அடைமொழிகள். அற்புதம்
- 351ம் பாட்டிற் காண்க. அற்புதம் ஞானமுமாம். தனி - தனி முதல்வன்
இயற்றுவதாலும், பிறர் இயற்றுதற்கியலாமையாலும் தனி
என்றார்.
இக்கூத்தின் இயல்பு முன்னர் உரைக்கப்பட்டது.
|