இவ்வாறு
மூழ்கிக் கரையேறும்போது இருவரும் ஆணை நிகழ்ந்த
முன்னை நாளிலிருந்து அந்த இளமைபெற்று விளங்கினர். தேவர்களும்
முனிவர்களும் கற்பகப் பூமழை பொழிந்தனர். யோகியாராய்வந்த இறைவன்
மறைந்து ஆகாயத்தில் விடையின்மீது உமையம்மையாருடன்
அவ்விருவருக்கும் காட்சி தந்தருளினர். இவர்களிருவரும் கண்டு போற்றித்
தொழுது நிற்க, ஐம்புலனும் வென்று மிக்கீர்களே! இவ்விளமையுடன்
என்றும் நம்பால் இருப்பீர்களாக! என்று அருள் செய்து எழுந்தருளினர்.
செயற்கரிய செய்கைசெய்து சிவலோகத்திற் சேர்ந்து இவர்கள் என்றும்
நீங்கா இளமையுடன் பேரின்ப முற்றார்கள்.
திருநீலகண்டத்தினிடத்தே பத்திசெய்து, அத்திருவாணை
போற்றிச்
செயற்கருஞ் செய்கைசெய்து சிறந்து பேறுபெற்றதனாலே, இப்பெரியார்
திருநீலகண்ட நாயனார் எனப் பெயர் பெற்றார்.
கற்பனை:-1.
அடியவர் கூட்டத்திற் குலம்பற்றிய பெருமை சிறுமை எண்ண வருவதின்றாம். நாடவர்
நாடறிகின்ற, குலமிலராகக் குலமதுண்டாக
என்றது ஆளுடைய பிள்ளையார் தேவாரம்.
2. ஒவ்வொருவரும் அவ்வவர்க்குரிய குலத்தொழிலையும்
குலவொழுக்கத்தையும் கைவிடாமற் பின்பற்றி வாழத்தக்கவர்.
3. குலத்தொழில்
- அல்லது வேறு தொழில் செய்வோர்.
அதனைத் தம் சீவனத்துக்கும் இல்வாழ்க்கை நிலைக்கும் அவசியமான
அளவுக்கே அமைத்துக் கொண்டு ஏனைக்காலத்தையும் முயற்சியையும்
சிவபெருமான்பாலிலும் சிவனடியார்பாலிலும் செலுத்தக்கடவர். இந்நாளில்
மக்கள் பேராசையுட்பட்டு அலைவது போல் மேலும் மேலும்
எல்லையின்றித் தொழில்செய்து பொருளீட்டிக் காலங்கழித்துக்கொண்டு
அரனினைவும் அடியார் நினைவுமின்றி இறந்தொழிவது முறையன்று.
4. பரத்தையர் கேண்மை நூல்களாலே கடியப்பட்ட தீயொழுக்கமாம்.
5. நாயகனது பரத்தையர் கேண்மையான ஒழுக்கம் நாயகிகள்பால்
மானம் பொறாத ஊடலை விளைக்கும். இது கற்புக்கிழுக்கன்று.
6. இறைவனது திருநீலகண்டம் யாவராலும் பாராட்டிப்
பத்தி
செய்தற்குரியது. அது புவனங்களை யெல்லாம் அழிவில்லாமலும் கேடு
வராமலும் காத்த இறைவனது அருட்செயலை விளக்கி அதனை
உலகமறிந்துய்ய வைத்த அருளடையாளம்.
பழனத்தரசை யெழிலிமையோர், படிறு மொழிந்து
பருகக் கொடுத்துக்
பரவை நஞ்ச, மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே - என்ற
பதினொராந்திருமுறையும் (சிவபெருமான் றிருவந்தாதி - 28) காண்க.
7. இறைவன் ஏந்திய திருவோடு மிகப் பெருமையுடையது.
அது
உலக முய்ய ஏந்தப் பெறுவதாம். சிவஞானிகள் தாங்கும் திருவோடும்
இத்தன்மையதேயாம்.
8. காமம் கொடியது. அதன்வழிப் பட்டோர்க்கு அது
எல்லாத்
தீமைகளையும் விளைக்கவல்லது. அது எவராலும் வெலற்கரியது.
இறைவன் சார்பும் அடியவர் சார்பும் பெற்றுத் திருத்தொண்டில்
உறைப்புடைய அடியவர்க்கே காமத்தை வெல்லுதல் இயலுமே யன்றித்
தேவர்க்கும் அரியதாம். விட்டுணு, பிரமன், இந்திரன், சந்திரன் பல
முனிவர்கள் முதலியோர் சரிதங்களைக் காணில் இதன் உண்மையும்,
இந்த நாயனாரது அளவிலா மேன்மையும் விளங்கும். இளமை மிக்க
இந்நாயனாரும் மனைவியாரும் ஒரே வீட்டினுள் வாழ்ந்தும் காமத்தை
அறவே துறந்து ஆயுள் முழுவதும் திருவாணையினையே காத்த அரிய
பெருமை உலகம் போற்றத் தக்கது. மாது சொன்ன சூளாலிளமை துறக்க
வல்லே னல்லன்' என்று தவராச சிங்கமாகிய பட்டினத்தடிகளும்
பாராட்டியது இப்பெருமை.
|