பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு51

Periya Puranam
“மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழு மம்பலத்தே மன்னிக் கூத்தை
ஆடுவான் புருவதற்கு முன்னோ பின்னோ
அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே ”

என்ற தேவாரமும் காண்க. முன்னோ என்பது ஒடுக்க முறையையும், பின்னோ
என்பது தோற்றத்தின் முறையையும் குறிக்கும் என்பர். இவ்விரண்டும் கூறவே,
இடைப்பட்ட எல்லாத் தலங்களும் இவற்றுள் அடங்கும் என்பதாம்.
பிருதிவியாகிய சம்பந்தம் பற்றிக் காஞ்சியையும் சேர்த்து வரும் பாட்டிற்
கூறுவது காண்க. ஆகாயத்திற்கு ஒரு தலம் கூறிய முனிவர், பிருதிவிக்கு
இரண்டு தலம் கூறுவானேன்? எனின், இரண்டு கண்களும் சேர்ந்து ஒன்றாகிய
முழுக்காட்சி தருவதுபோலத் திருவாரூரும் காஞ்சீபுரமும் ஆகிய இரண்டும்
கூடிய வழியே பிருதிவியின் முழுத்தன்மையைச் செய்கின்றன. இதனைச்
சுந்தரமூர்த்திகள் சரித நிகழ்ச்சியின் துணைகொண்டு பின்வரும் பாட்டின் கீழ
உரைக்கப் பெறுகின்றதும் காண்க. இவ்வாறு இரண்டு பொருள்கள்
ஒன்றற்கொன்று சார்பு பெற்று ஒரு முழுப் பொருளை உண்டாக்குவனவாயின்
ஆங்கில மொழியில் அவற்றை - Complimentary - சார்ந்து
முழுமையாக்குவன - என்பர்.


     இவற்றுள் திருவாரூர் சிவத்தன்மை மிகுந்த பிருதிவித் தலம் என்றும்,
காஞ்சீபுரம் சத்தித்தன்மை மிகுந்த பிருதிவித்தலம் என்றும் கூறுவர். மேலே
ஆகாய தத்துவ நிலயமாகிய சிதம்பரத்துக்கு இரண்டு பாட்டுக்கள் கூறினர்.
ஆகாய தத்துவத்துக்கு இரண்டு தன்மைகள் உண்டு. அவையாவன : ஒடுக்கக்
கிரமத்திலே உலகத்தைத் தன்னுள்ளே ஒடுக்கிக்கொள்ளும் சிவத்தன்மை
ஒன்று. சிருட்டிக்கிரமத்திலே உலகத்தைத் தன்னிடத்திலிருந்து தோற்றுவிக்கும்
சத்தித் தன்மை மற்றொன்று. இவற்றை முறையே சிதம்பரத்துக்குக் கூறிய
இரண்டு பாட்டுக்களில் “பெரும்பற்றப் புலியூர் ” என்ற முதற் பாட்டில்
சிவத்தன்மையையையும், “மெய்த்தவக்கொடி காண” என்ற இரண்டாம்
பாட்டில் சத்தித் தன்மையையும் அறிவித்தார். இவ்விரண்டு தன்மைகளும்
பிருதிவியிலும் உள்ளன. இதுவே ஒடுங்கும்போது சிவத்தன்மையும்,
தோற்றிவரும் போது சத்தித்தன்மையும் மேற்கொள்ளும். இவற்றிலே அந்த
பிருதிவிச் சிவத்தன்மையைத் திருவாரூரிலும், பிருதிவிச் சத்தித்தன்மையைக்
காஞ்சீபுரத்திலும் காட்டுவார் பிருதிவிக்கு இவ்விரண்டு தலங்களையும்
கூறினார். இவ் வரலாற்றைச் சொல்லும் உபமன்னிய முனிவராதிய “துறந்த
முனிவர் தொழும் பரவை துணைவ ” ராகிய சுந்தரமூர்த்திகள் முதலிய
முனிவோர்களது “இதய கலம ”த்து விளங்குவது திருவாரூராதலின் அதுவும்
முனிவர் போற்றும் பெரும்பற்றப் புலியூர் போன்று சிவதன்மை பெற்ற
பிருதிவித்தலமாம். “உலகீன்றவள் ” வழிபடுதலால் சத்தித் தன்மைபெற்ற
பிருதிவித் தலம் காஞ்சீபுரமாம். இதன் குறிப்பை வரும்பாட்டிற் காண்க.


     யாவையு முள்ளலர் - என்பதும் பாடம்.                33

44. எம்பி ராட்டியிவ் வேழுல கீன்றவள்  
  தம்பி ரானைத் தனித்தவத் தாலெய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்
றும்பர் போற்றும் பதியு முடையது.
34

     (இ-ள்.) எம்பிராட்டி ... என்று - எமது பெருமாட்டியும்
இவ்வேழுலகங்களையும் பெற்றெடுத்த தாயும் ஆகிய காமாட்சியம்மையார்
தமது பெருமானாகிய இறைவனைத் தனித்தவஞ் செய்து வெளிப்படக் கண்டு
கம்பையாற்றின் கரையிலே பூசித்த காஞ்சீபுரம் என்னும் பேருடைய; உம்பர்
... உடையது - தேவர்களும் வந்து வணங்கும் தலத்தையும் அத்தென்றிசை
உடையதாம்.