பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்545

Periya Puranam

4. இளையான்குடி மாறநாயனார் புராணம்

தொகை

“இளையான்றன் குடிமாற னடியார்க்கும் மடியேன்“
- திருத்தொண்டத்தொகை

வகை

“இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்
கயலாரீளையான் குடியுடை மாறனெங் கற்பகமே“
- திருத்தொண்டர் திருவந்தாதி


                            விரி

                                                                          வேறு

440. அம்பொ னீடிய வம்ப லத்தினி லாடு வாரடி
                                  சூடுவார்
 
  தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மை
                               தரித்துளார்
நம்பு வாய்மையி னீடு சூத்திர நற்கு லஞ்செய்
                                தவத்தினா
லிம்பர் ஞாலம் விளக்கி னாரிளை யான்கு டிப்பதி
                                 மாறனார்.
1

     புராணம் :- இளையான்குடியிலே அவதரித்த மாறன் என்ற
பெயருடைய நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்த
முறையானே இச்சருக்கத்து நான்காவது இளையான்குடிமாற நாயனார்
சரிதங் கூறத்தொடங்குகின்றார். இளையான் றன்குடிமாற நாயனார் புராணம்
என்பதும் மகாலிங்கையர் பதிப்பு.

     தொகை :- ,இளையான் தன் குடிமாறன் - இளையான்குடி என்னும்
பதியிலே அவதரித்த மாறன் என்னும் பெயருடையார். தன் - இளையான்
எனும் பெயர் கொண்டு தனது பெயர் பூண்ட குடி என்க. இளையனாது
குடி என்றலுமாம். மாறன் - இந்நாயனாரது பெயர். அடியார்க்கும் -
மாறனுக்கடியவனாவதன்றி அவரடியார்க்கும். “தொண்டர் தொண்டர்க்குத்
தொழும்பாய்த் திரிய“ (பட்டினத்தடிகள்.)

     வகை: - இயலா இடை - பொருள் - காலம் - வசதி முதலிய
பலவகையாலும் அமுதளிக்க இயலாதிருந்த இடத்தே. (445, 446); மாதவர்
- (447, 448).

     இன்னமுதா விதைத்த - மேலைக்கு இன்னமுதாக ஆகுமாறு
முளைக்கும்படி விதைத் (452) முளைவித்து - வயலிலே முளைக்காகத்
தெளித்துவைத்த முளைகொண்ட வித்து நெல். (452) வாரி -
வாரிக்கொண்டுவந்து கொடுத்து. மனை அலக்கு - வீட்டுக்கூரை
அலக்கினால் வறுத்து; அலக்கே விறகா மூட்டி வறுத்து. (458, 459);
வறுத்து - வறுக்கச்செய்து. செயலார் - புன்செய்க் குழிகளில் முளைக்க
விட்ட. பயிர் - கீரை முதலிய கறிப் பயிர். விழுத் தீங்கறி - தூய இனிய
கறி வகைகளாக - (461); ஆக்கும் அவன் - ஆக்குவிக்குப்பவன் - (460)
ஏவுதற்கருத்தா.

     செழுநீர்க் கயலார் இளையான் குடியுடை மாறன் -
செழிப்புள்ள நீரில் கயல்கள் நிறைதற் கிடமாகிய இளையான்குடியைத்
தமது பதியாக உடைய மாறனார்.

     எம் கற்பகமே - எமக்கு - அடியார்களுக்கு -
நினைத்தவையெல்லாம் தரும் இயல்புடைய கற்பகமே யாவர்;
எம் கற்பகமே
- (465) உரை காண்க. இப்பாட்டிற்கூறியன நாயனாரது
ஊரும், பேரும், வறுமையிலும் அடியவர்க்கு நெல்வாரி வறுத்துப்
பயிர்க்கறி யார்க்கும் அடிமைத்திறமும், சரிதப்பயனும் கூறப்பெற்றன.