பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்549

Periya Puranam

காதரவாகிய நீரின் மல்கிய என்று குறிப்பார் இதனை அடுத்துவைத்த அழகு
காண்க. அந்நீருக்கும் ஆதரவு இறைவன தருளே என்பது குறிப்பாம். “ஏரி
னுழாஅருழவர் புயலென்னும், வாரி வளங்குன்றிக் கால்“ என நாயனார்
கூறுவதும் காண்க. இப்பொருத்தங்களை இம்முறையே,

“பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியி னின்ற
நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
                         போவன்காண்....“
           - திருத்தாண்டகம் திருச்சிவபுரம் - 6.

என்று அப்பர் பெருமான் அருளியிருப்பதும் காண்க. (இங்குப் பரிசாக
நிலவேந்தர் நினைவுறுதலாவது தமது நீதி முறைக்காக இறைவன் கருணை
கூர்ந்து வானம் வழங்கச் செய்து தம் கீழ்உள்ள உயிர்களை வாழுமாறு
செய்கிறானென் றெண்ணுதல்.)

     வேணியர் அடியார் திறத்து - வேணி - ஒன்றோடொன்று
கூட்டிக்கொண்டிருப்பது. வேணியாரது அடியார்களின் திறத்திலே.
வேற்றுமை உருபுகள் விரிக்க. திருந்த - திருத்தமாக இருக்கும்படி.

     பாரின் மல்க விரும்பி - “யான்பெற்ற வின்பம் பெறுகவிவ்
வையகம்“ என்றபடி உலகினரும் செல்வமும் சிவசிந்தையும் பெற்று
என்றும் பெருகி நீடுக என்று விரும்பி. “பூதபரம்பரை பொலிய“,
“மன்றுளா ரடியாரவர் வான்புகழ், நின்ற தெங்கு நிலவி யுலககெலாம்“
என்ற புராணத் திருவாக்குக்கள் காண்க. இதனானே, இம்பர் ஞாலம்
விளக்கினார் என மேற் பாட்டிற் கூறியதும் காண்க.

     மற்றவை பெற்ற நீடு பயன் - மற்று அந்தச் செல்வமும்
சிந்தையும் தாம் பெற்றதனால் உளதாகிய நீடிய பயன். “கற்றதனா லாய
பயன்“ (குறள்) என்புழிப் போலக் கொள்க. நீடுபயன் - தம்மோ
டொழியாது பின்னரும் வழிவழி நீடி வருவதாகிய பயன். அவை பெற்ற
பயன் தாம் அடியவர்களைப் பேணுவதனோ டொழியின், அது தம்மோடு
நின்றுவிடும். தாம் பேணுவது போலப் பாரின் மல்கப் பிறரும்
பேணுவாராயின் அப் பயன் நீடி வரும் - என எண்ணி, உலகில் யாவரும்
செல்வமும் சிவசிந்தையும் பெற்று அடியாரைப் பேணி ஒழுகி உய்யக்
கடவர் என்றதனையே விரும்பி வந்த நாயனார் செய்தவற்றை மேல் வரும்
இரண்டு பாட்டுக்களிற் கூறுகின்றார்.

     இவ்வாறு பாரின் மல்க விரும்பி வந்தமை காரணமாகவே, பின்னர்,
இவர் சிவப்பேறு எய்திய காலத்து “இருநிதிக் கிழவன்றானே, முன்பெரு
நிதிய மேந்தி மொழிவழி யேவல்கேட்ப வின்பமார்ந் திருக்க“ என்று
இறைவன் அருளினன் என்பதும் காண்க (465). விரிவு ஆண்டுக் காண்க.

     செல்வமும் சிவசிந்தையும் தாம் பெற்றதன் நீடுபயன் கொள்வார்
அவ்வாறே உலகமும் பெற்று மல்க விரும்பிய நாயனாரது மனத்தின்
றொழில் இப்பாட்டாற் கூறினார். அங்ஙனங் கொண்ட மனத்தோடுபசரித்த
வாக்கின் றொழில் வரும் பாட்டாலும், பாதம் விளக்கி அருச்சித்து
அமுதூட்டுவதாகிய காயத்தின் றொழில் அதன்மேல் வரும் பாட்டானும்
கூறுகின்றார்.

     சிவபூசை அடியார் பூசைகளில் மன முதலாயின முக்கரணங்களும்
ஒன்ற வழிபடும் முறையும், மகேசுவர பூசை முறையும் வகுத்துக்
காட்டியவாறுமாம். மகேசுவர பூசையிலே மகேசுவரர்கள் செய்யும்
ஆசீர்வாதத்தின் பலனாலே உலகிலே செல்வமும் சிவசிந்தனையும் பெருகி
நிலவும் என்பது.

     நீடுபயன - காலத்தால் நீடுவதன்றி அளவினாலும் நீடுவதாம் -
பெரியதாம். அரன் பூசையினும் அடியார் பூசை இரட்டைப் பயனுடைய
தென்பது ஆகமங்கள் மொழிந்த உண்மை, “படமாடக் கோயிற் பகவற்
கொன்றீயி, னடமாடக் கோயி