|
னம்பர்க்கங் காகா;
நடமாடக் கோயி னம்பர்க்கொன் றீயிற், படமாடக்
கோயிற் பகவற்க தாமே“ (ஏழாந் தந்திரம் - 154) என்பது திருமூலர்
திருமந்திரம். “கபாலீச்சர மமர்ந்தான், ஒட்டிட்ட பண்பி னுருத்திர
பல்கணத்தார்க், கட்டிட்டல் காணாதே போகியோ பூம்பாவாய்“ என்ற
ஆளுடைய பிள்ளையார் திருமயிலைத் தேவாரத்தையும், அதனை
வடித்தெடுத்துக் காட்டிய “மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடு,
மண்ணலா ரடியார்தமை யமுதுசெய் வித்தல், கண்ணினாலவர் நல்விழாப்
பொலிவுகண் டார்தல், உண்மையாமெனி லுலகர்முன் வருக“ (திருஞா -
புரா - 1087) என்ற புராணத் திருவாக்கும், “வேத வுள்ளுறை யாவன
விரிபுனல் வேணி, நாதர் தம்மையு மவரடி யாரையு நயந்து, பாத வர்ச்சனை
புரிவதும் பணிவது மென்றே, காத லாலவை யிரண்டுமே செய்கருத்
துடையார்“ (திருநீலநக்கர் புராணம் - 5) என்ற புராணமும் இங்கு
நினைவுகூரத் தக்கன.
பயன்கொள்வார்
- அளித்துளார் - எனக்கூட்டி முடிக்க.
இதனை வினைமுற்றாகக் கொண்டு விரும்பி. (விரும்பியதனாலே)
அவை பெற்ற நீடு பயனைக் கொள்வாராயினார் என முடிப்பாரு முண்டு.
திருந்தி
- மற்றிவை - என்பனவும் பாடங்கள். 2
422. (வி-ரை.)
ஆரம் - ஆத்தி. ஆரமும் என்பும்
என
உம்மைத்தொகை. ஆரம் - மாலை எனக் கொண்டு ஆரமாக எலும்பை
அணிந்த என்றலுமாம். என்பு - எலும்பு. சங்கார காலத்து இறந்தொழிந்த
பிரமன்மா லிருவரது எலும்புகள். என்பு புனைந்த ஐயர் என்றது
அவ்வெலும்புடைய உடம்புடன் வாழ்ந்த பிரமன் விட்டுணு முதலிய பெருந்
தேவர் பலரும் இறந்தொழிந்த காலத்தும் தாம் நித்தியராய் உள்ள
பெருமையுடையார் என்றதாம். ஐயர் பெருமையுடையார்.
“பெருங்கடன்
மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போ
யிருங்கடன் மூடி யிறக்கு; மிறந்தான் களேவரமுங்
கருங்கடல் வண்ணன் களேவர முங்கொண்டு கங்காளராய்
வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே“ |
| |
|
“கங்காள
மாமாகேள் காலாந் தரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ“
|
என்ற திருவாக்குக்கள்
காண்க. “எலும்புங் கபாலமு மேந்தில னாகில்,
எலும்புங்கபாலமு மிற்றுமண் ணாமே“ என்ற திருமந்திரப்படி இவர் ஏந்திப்
புனைந்ததனால் அவை இற்றுப்போகாது நின்றன. நித்தராகிய இவ்வையரது
அன்பர்களும் தாமும் நித்தராவார்; தம்மை அடைந்தாரையும்
நித்தர்களாக்குவார்; ஆதலின் அன்பர் என்பதோர் தன்மையை நாடினார்
என்பது குறிப்பு. அன்பர் என்பதோர் தன்மையால் - பிரிநிலை யேகாரம்
தொக்கது. அன்பர் என்ற ஒரே தன்மையினாலே தேற்றமுமாம். தன்மை
என்றதனால் வேடம், பாவனை, செயல் என்பனவும் கொள்ளப்பெறும்.
நேர
- தம் முன்பு; நேராக. தாம் நேர்மை அடைய - நேர்படுமாறு
என்றலுமாம். “சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன்“ - திருவாசகம்.
யாவராயினும்
- முற்றும்மை. யாரெனினும் - (405) என்றதும்
அதன்கீழ் உரையும் காண்க. நித்தமாகிய - இயல்பாகிய - மாறுதலில்லாத.
பத்திமுன்கூர
- தம்மிடத்திலே நித்தியமாய் - இயல்பாய் -
அமைந்த அடியார் பத்தி இங்கு முன்னே சிறப்பாய்க் கூர்ந்து கூடிற்று.
கருணை கூர்ந்து - அன்பு கூர்ந்து என்பனபோலக் காண்க. வந்து
-
எதிர்கொண்டு - குவித்து - நின்று என்பன வினவி மொழி கூறுவதன்
முன் நடந்துகொள்ளும் முறை. வினையெச்சங்கள் ஒவ்வோர் தனிச்செயல்
குறித்தன.
|