பக்கம் எண் :


மெய்ப்பொருணாயனார் புராணம்577

Periya Puranam
469. மங்கையைப் பாக மாக வுடையவர் மன்னுங்
                                கோயில்
 
  எங்கணும் பூசை நீடி யேழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து
                               வாழ்வார்,
தங்கணா யகனுக் கன்பர் தாளலாற் சார்பொன்
                                றில்லார்,
3

470. தேடிய மாடு நீடு செல்வமுந் தில்லை மன்றுள்
 
  ஆடிய பெருமா னன்பர்க் காவன வாகு மென்று
நாடிய மனத்தி னோடு நாயன்மா ரணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து
                                  வந்தார்.
4

     புராணம் :- மெய்ப்பொருள் என்ற பேருடைய நாயனாரது சரிதமும்
பண்புங் கூறும் பகுதி. நிறுத்த முறையானே தில்லைவாழந்தணர்
சருக்கத்திலே ஐந்தாவதாக மெய்ப்பொருணாயனார் புராணங் கூறத்
தொடங்குகின்றார்.

     தொகை :- வெல்லும் ஆ மிகவல்ல - வெல்லும் வழியிலே
மிகவும் வல்லவராகிய. - ஆறு - வழி. ஆறு என்பது ஈறு கெட்டு
என நின்றது. வென்ற வல்லமையின் விரிவு 481-ம் திருப்பாட்டிற் காண்க.
மெய்ப்பொருள - நாயனாரது பெயர்.

     வகை :- கற்ற...பொய்த்தவன் - வீட்டுநூலாகிய ஆகமங்கற்ற நல்ல
உண்மைத் தவனைப்போலப் பொய் வேடம் பூண்ட முத்தநாதன் என்பவன்
(473-478); காய்சினத்தாற் செற்றவன் தன்னை - (பல முறையும் இகலிப்
போரிற் பரிபவப்பட்டுப் போனதால்) வெஞ்சினங்கொண்டு
(வஞ்சனையினாலே) தம்மைச் செற்றவனை (472-481); அவனைச் செறப்
புகலும்
- (தமது காவலாளனாகிய தத்தன்) அவனை வாளினால் எறியப்
புகும்போது; “தத்தா நமரே“ ...... பெற்றவன் - “தத்தா! இவர் நமரே“
எனத் தமது திருவாக்கினாற் சொல்லித் தடுத்து (482); (அவனை வேறு
எவரும் அடரா வண்ணம் கொண்டு போய்விடச் சொல்லியும், அவ்வாறு
விட்ட வார்த்தை கேட்குமளவும் சோர்கின்ற உயிரைத் தாங்கியும் அது
கேட்டபின் இறைவனது திருவடிகளைச் சிந்தித்தும்) சிவலோக மடைந்தவர்
(488 - 489); சேதிபன் - மெய்ப்பொருளா மென்று பேசுவாரே -
சேதிநாட் டரசராகிய மெய்ப்பொருணாயனாரென்றே (அறிந்தோர்)
சொல்வர். இங்கு அறிந்தோர் என்ற எழுவாயும், அவனைச் செறப்புகலும்
- என்ற இடத்துத் தத்தன் என்ற எழுவாயும் வருவிக்க. கற்ற -
கற்பவற்றுள்ளே தலையாகிய வீட்டுநூலாகிய ஆகமம், கற்ற என்க. (478,
479); புகலும் - புகுதலும்; வானுலகம் - வானோர்க்கும் எய்துதற்கரிய
உயர்ந்த உலகமாகிய சிவலோகம். “தத்தா நமரே“ - இச்சொற்றொடர்
கல்வெட்டு முதலியவைகளினும் கண்டது. விரிவு 482-ம் திருப்பாட்டின்
கீழ்க்காண்க.

     எனப்பேசுவரே - எனவே பேசுவர். ஏகாரம் பிரித்துக் கூட்டுக.
ஏகாரம் தேற்றங் குறித்தது. இதனை அசையென் றொதுக்குவாறு முண்டு.

     நாடும், பேரும், முறையே சேதிபன் - மெய்ப்பொருள - என்று
குறித்தபடி (467, 472). பேரும், பண்பும், சரிதக்குறிப்பும் முதனூலிற்
கண்டது. வெல்லுமா மிகவல்ல - என்றதனாற் பகையரசனும், பகைமையும்,
பல போர்களில் வெற்றியும், வஞ்சனையிலும் வெற்றிபெற்ற நேர்மையும்
முதனூல் குறிப்பிற் கூறிற்று.

     நாடும், பகைவன் வஞ்சித்த திறமும், வஞ்சனையை அடிமைத்திறம்
பேணிய வகையாலே வென்ற திறமும், காவலாளன் பேரும், அவனது
திறமும், பிறவும் வகைநூல் பேசிற்று.

     அவை விரிநூலில் விரிந்தவகை பாட்டு எண்களாற் குறிக்கப்பெற்றது.
விரிவு புராணத்துட் காண்க.

     467. (இ-ள்.) வெளிப்படை. நன்மை பொருந்திய சேதி நாட்டிலே
திருக்கோவலூரிலே நிலைபெற்ற அரசு செலுத்தி வாழ்ந்து, உமாதேவியாரை
ஒரு பாகத்தில் உடைய சிவபெருமானிடத்தில் வைத்த அன்பிலே
வழிவழியாக வருகின்ற