பக்கம் எண் :


576 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

காணலாம். நிலையாத வாழ்வினைத் தந்து நிலைத்த வாழ்வினைக்
கொள்ளுதல் பேரூதியமான வாணிபமுமாம். “தந்ததுன் றன்னைக்
கொண்டதென் றன்னைச் சங்கரா வார்கொலோ சதுரர்?“ என வாதவூரடிகள்
அருளியபடி, முளைத்த நெல்லும், ஓட்டைவீடும், குறும்பயிரும் கொண்டு,
இங்குச் சாவா அமுதமும், நிலைத்த வீடும், நெடுநிதியமும் தந்த இச்சரிதம்
உலகர்க்கு அருங்கற்பனை கற்பித்தாள்வதொன்றாகும்.

     11. சிவனடியார் பூசை இவ்வுலகத்திலேயும் எல்லாச் செல்வங்களையும்
தரும் (444); அம்மையிலே பேரின்பமுந் தரும் (465). “இம்மை வானவர்
செல்வம் விளைத்திடும்; அம்மை யேற்பிற வித்துயர் நீக்கிடும்;“
(திருக்குறுந்தொகை - திருவிடைமருதூர் - 4) “இம்மை யேதருஞ் சோறுங்
கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம். அம்மையே சிவலோக மாள்வதற்
கியாது மையுறவில்லையே“ (நம்பிகள் - கொல்லி - திருப்புகலூர் - 1) என்ற
தமிழ் மறைகளிற் கண்ட உண்மைகள் அரன் பூசைக்குரியன. அதுபோலவே
அரனடியார் பூசைக்கு முரித்தாயினவாம்.

     12. சிவனடியார்வேடங்களைச் சிவனெனவே கொண்டு
வழிபடுதல்வேண்டும். “நேயமலிந்தவர் வேடமு, மாலயந் தானு மானெனத்
தொழுமே“ - சிவஞான போதம் 12-ம் சூத்திரம். இதன் தத்துவத்தை
மேல்வருஞ் சரிதத்தினுங் காண்க. அடியார்பூசை யளிக்கும் முறையினை
இச்சரிதத்தினின்றும் உலகம் உணர்ந்தொழுகி யுய்வதாக.

இளையான்குடி மாறநாயனார் புராணம்
முற்றும்



5. மெய்ப்பொருணாயனார் புராணம்.



தொகை

“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்“
                  - திருத்தொண்டத் தொகை

வகை

“கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தாற்
செற்றவன் றன்னை யவனைச் செறப்புக லுந்திருவாய்
மற்றவன் “றத்தா! நமரே“ யெனச் சொல்லி வானுலகம்
பெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாமென்று பேசுவரே.
                         - திருத்தொண்டர் திருவந்தாதி

விரி

467. சேதிநன் னாட்டி னீடு திருக்கோவ லூரின் மன்னி
 
  மாதொரு பாக ரன்பின் வழிவரு மலாடர்
                                கோமான்
வேதநன் னெறியின் வாய்மை விளங்கிட
                          மேன்மை பூண்டு
காதலா லீசர்க் கன்பர்கருத்தறிந் தேவல்                                 செய்வார்;
1

468. அரசிய னெறியின் வந்த வறநெறி வழாமற் புல்லி
 
  வரைநெடுந் தோளால் வென்று மாற்றலர்
                         முனைகண் மாற்றி
யுரைதிறம் பாத நீதி யோங்குநீர் மையினின்
                                 மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையா னன்பர் வேடமே சிந்தை
                                செய்வார்.
2