4.
“அகர மாயிர மந்தணர்க் கீயிலென்?; சிகர மாயிரஞ் செய்து
முடிக்கிலென்?; பகரு ஞானி பகலூண் பலத்துக்கு, நிகரில்லை யென்பது
நிச்சயந் தானே“; “ஆறிடு வேள்வி யருமறை நூலவர், கூறிடு மந்தணர்
கோடிபே ருண்பதி, னீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை; பேறெனி
லோர்பிடி பேறது வாமே“ (திருமூலர் திருமந்திரம்) என்பனவாதி
விதிகளுக்கு இச்சரிதம் இலக்கியமாய் நிற்பதுடன் அடியவர் பூசையின்
பயனையும் இனிது விளக்குவதாம்.
5. செல்வமுள்ள காலத்துச் சிவபூசையும் அடியார் பூசையும்
பேணுதல்
போலவே, வறுமை வந்த காலத்தும் அவை தளராது மிகப் போற்றற்
குரியன. அங்கே சிவன் வெளிப்பட்டருளுவன்.
6. செல்வமுள்ளபோது சிறிதளவிற் செய்த சிவப்
பணிவிடைகளையும்
சிறிய துன்பம் முதலியன நேர்ந்தபோது சிவனை நொந்து கைவிடுவார் பலர்.
அதுசெய்யலாகாது. எஞ்ஞான்றும் உயிர்களுக்கு நலமே செய்பவராய், நன்றே
யுடையாராய்த் தீயதிலாதாராய், உயிர்களுக்கு அவற்றினுமினியராய் உள்ள
சிவபெருமானை எத்துணையானும் நோபவர் தமக்கு இடர் தேடியவரே
யாவர். செல்வமும் வறுமையும் இறைவன் றிருவருள் வழியே வருவன
என்றும், அவற்றுள் வறுமை நமது நன்மைக்கே காரணமாய் வருவது
என்றும் உணர்ந்தொழுகுதல் வேண்டும். “விரைந்தாளு நல்குரவே“;
“நோவுளார் வாயுளான்“ முதலிய திருவாக்குக்களின் உண்மையைச்
இச்சரிதத்தின் வைத்து உணர்ந்து நாள்தோறும் மக்கள் தமது உலக
ஒழுக்கத்திற் பின்பற்றக் கடவர்.
7. உண்மை உணர்ந்தோர் தமக்கு எவ்வளவு பெரியஇடர்களும்
துன்பங்களும் வந்த போதிலும் சிவபெருமானிடத்திலும் சிவனடியாரிடத்திலும்
வைத்த அன்பினிற் சிறிதுங் குறைவு படா தொழுகுவர்.
8. தமக்கே உணவில்லாதிருந்த நிலையிலே, பெருமழையிலும்
பேரிருளிலும் பாதி நள்ளிரவிலும் வயலினுட்சென்றும், அன்று விதைத்த
நென்முளைகளை வாரியமுதாக்கியும், விறகுக்காக வீட்டுக் கூரையை
அறுத்தும், புன்செய்க் குறும்பயிர்களை வேரோடும் பறித்துக்
கறிவகைகளாக்கியும் மனதார அமுதுபடைக்க முற்பட்ட நாயனார் -
மனைவியார் இவர்களது அன்பின்றிறத்தில் ஒரு சிறிதளவேனும் உணர்ந்து
உலகம் பின்பற்றுமானாற் கடைத்தேறி யுய்யும்.
9. நாயனாருங் மனைவியாரும் மிக்க செல்வத்திலேயும்,
அது மாறிய
மிக்க வறுமையிலேயும் கொண்டுசெலுத்திய இல்வாழ்க்கை நலத்தில் ஆயிரம்
கூறில் ஒரு கூறேனும் இந்நாள் மக்கள் தத்தம் இல்வாழ்க்கையிற்
கைக்கொண்டு வாழ்கின்றார்களா? என்பது அவ்வவர் வாழ்க்கையினை
நோக்கிச் சிந்திக்கத்தக்கது. “இல்லானை - இல்லாளும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாய்வேண்டாள்; செல்லாதவன்வாயிற் சொல்“; “இல்லோரை
யெல்லோரும் வெல்லுவர்“; “பொருளிலார்க் கிவ்வுலகமில்லை“;
முதலிய
உலக நீதியின் நிலைகளை யெல்லாம் அடிப்படுத்தி வென்று, இகத்திலேயும்
பரத்திலேயும் தமக்கும் பிறர்க்கும் இன்பம் வரச்செய்த மனைவியாரது
கற்பின் திண்மையும், இவ்விருவரது அன்பின் உறைப்பும் உலகம் பல்காற்
சிந்தித்துய்வதாக.
ஒன்றுக்கும் கட்டுப்படாத அடங்காத் தனமே வீடு பேறு
என்ற
பேய்த்தனமாகிய பித்துக்கொண்டலையும் இந்நாளின் நாகரிகப்பேர்
கொண்ட பேயுலகம் இச்சரிதத்திற் கண்ட, வறுமையிற் செம்மை பெற்றதாய்,
மாசற்றதாய், தூயதாய், மனமொத்ததாய் நிகழ்ந்த இல்வாழ்க்கை
நிலையினைச் சிந்தித்துச் சிந்தித்துத் திருந்தி உய்வதாக.
10. விளைநிலமும், வீடும், வருங்கால வாழ்வுக்கென்ற
பிறஆதரவுகள்
முதலிய பற்றுக்களும் அற்ற இடமே ஒருவனுக்கு வீடு பேற்றின் நிலை
தருவதாம். “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்“ (குறள்); “யானெனதென்
றற்ற விடமே திருவடியா“ (கந்தர் கலிவெண்பா) முதலிய திருவாக்குக்களின்
உண்மை இங்கு விளங்கக்
|