பக்கம் எண் :


60 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
     திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்
     பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்
ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு மடியே
     னொலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
4
   
வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
     மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்
     ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்
தம்பிரான் றிருமூல னடியார்க்கு மடியேன்
     னாட்டமிகு தண்டிக்கு மூர்க்கர்க்கு மடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
5
   
வார்கொண்ட வனமுலையா ளுமைபங்கன் கழலே
     மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
     செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கு மடியேன்
     கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
6
   
பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
     பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடிய னரசிங்க முனையரையர்க் கடியேன்
     விரிதிரைசூழ் கடனாகை யதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
     கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்
ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே.
7
   
கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
     கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்
நிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற
     நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்
துறைக்கொண்ட செம்பவள மிருளகற்றுஞ் சோதித்
     தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்
துறைக்கொண்ட வேனம்பி முனையடுவார்க் கடியேன்
     ஆரூர னாரூரி லம்மானுக் காளே
8