கடல்சூழ்ந்த
வுலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கு மடியேன்
புடைசூழ்ந்த புலியதண்மே லரவாட வாடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்
அடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியேன்
ஆநா னாரூரி லம்மானுக் காளே. |
9 |
|
|
பத்தராய்ப்
பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்
பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்
அப்பாலு மடிச்சார்ந்த வடியார்க்கு மடியேன்
ஆரூர னாரூரி லம்மானுக் காளே. |
10 |
|
|
மன்னியசீர்
மறைநாவ னின்றவூர்ப் பூசல்
வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு மடியேன்
தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனா மடனடியே யடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பார்
ஆரூரி லம்மானுக் கன்பரா வாரே. |
11 |
குறிப்பு
:- இப்பதிகத்தின் பாட்டுக்களை அந்தந்தப் பாட்டினாற்
பெயர்பெற்ற அவ்வச் சருக்கங்களின் தலைப்பிலே பெய்தமைத்துள்ளோம்.
பாட்டுக்களின் உரைக் குறிப்புக்களை அங்கங்கே கண்டுகொள்க.
இத்திருப்பதிகத்தை ஆசிரியர் தமது புராணத்துப் பதிகமாக
அமைத்துக்கொண்டமையால் உரைக் குறிப்புக்கள் தரப்பெறுவனவாம்.
சுருக்கம் :-
திருமலை என்பது திருக்கயிலைமலையாம். அது
தேவர்களும் முனிவரும் பூதகணங்களும் சூழ்ந்திப்பது. அதனைக் காவல்
புரிபவர் நந்தியெம் பெருமான். அதன் ஒரு சாரலில் பல முனிவர் சூழ
உபமன்னிய முனிவர் தவம் செய்துகொண்டிருந்தபோது ஒரு நாள் பெரிய
சோதி ஒன்று தெற்கில் தோன்றிற்று. அதுகண்டு முனிவர்கள் இதுஎன்ன
அதிசயம் என்றனர். உபமன்னிய முனிவர் இறைவனைச் சிந்தித்து அந்தச்
சோதி கயிலைக்குத் திரும்பி வருகின்ற நம்பியாரூரரின் சோதி என்றுணர்ந்து
தொழுதனர். சிவனையன்றி ஒருவரையும் தொழாத அவர் அதனைத்தொழுத
காரணத்தை முனிவர்கள் வினவினர். இங்கு வருகின்றவர் நம்பியாரூரர்.
சிவசமான மானவர் என்று சொல்லி அவர் கயிலையிலிருந்து இரண்டு
சேடியரை நந்தனவனத்திற் கண்டகாட்சி காரணமாக இறைவனது
ஆணையின்வழிப் பூவுலகில் அவதரித்து, இறைவனாற் றடுத்தாட் கொள்ளப்
பெற்றுத், திருத்தொண்டத் தொகையை அருளிச் செய்து, அவ்விரு
சேடியர்களையும் மணந்து, பின்னர், இங்குத் திரும்பி வருகின்றார் என அவர்
சரிதம் முழுதும் சொல்லி யருளினார். அவர் அவதரிக்க நேர்ந்த தென்றிசை
|