610 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
5.
நாயகரது பக்கத் திருந்து, அவர்க்கு வேண்டும் பணி செய்து, பின்
றுயிலுதல் கற்புடை நாயகிகள் கடன்.
6. ஆகமங்களே உயிர்களை உயர்கதியிற் செலுத்த வல்லன.
இவை
பதி, பசு, பாச விலக்கணங்களை உணர்த்தி ஞானத்திற் கேதுவாவன. ஆகம
உண்மைகளின் வைத்த உறைப்பே, இங்குக் காலபேதமும் இடபேதமும்
நோக்காது நாயனார் திருவேடத்தினையே நோக்கி வஞ்ச வேடத்தானைப்
பணியவும், இச்சரித நிகழவுங் காரணமாயிற்று என்பது சிந்திக்கத் தக்கது.
ஆகம உணர்ச்சி பிற எல்லா வற்றினும் மேம்பட்டது.
7. பெரியோர்க்கு வரும் இடுக்கண் களையும் ஏதங்களையும்
வாயினாற்
சொல்லவும் தகாது. சொல்லுதலும் பாவமும் பழியும் பயக்கும்.
8. காவலாளர் தம் தலைவனது மெய்காவலிற் கண்ணுங்
கருத்துமாய்க்
காரியஞ் செய்தொழுகுதல் வேண்டும்.
9. காவலாளரும் ஏவலாளர் பிறரும், தலைவர் பணித்தது
தமது
கருத்துக்கு மாறுபடினும் அவர் பணித்தபடியே அப்பணியிற் றலைநின்று
உண்மையில் ஒழுகுதல் வேண்டும்.
10. குடிகளும் ஆயத்தார் முதலிய பிறரும் அரசாணையின்
வழி அஞ்சி,
அதன்கீழ் அமைந்துநின் றொழுகுதல்வேண்டும்.
11. வலிமையுள்ளபோது ஏவல் கேட்டியற்றலினும் வலியிழந்த
காலத்துக்
கேட்டொழுகுதல் சாலச் சிறந்தது.
12. திருநீற்றன்பு நெறியையே அரசாங்கத்தாரும், பிறர்
யாவரும்,
பாதுகாத் துய்த்தல் நலந் தருவது.
13. உயிர்போகுங் காலத்து இறைவனை எண்ணிச் சிந்தித்தல்
உயிர்க்கு
உறுதி பயக்கும். அது பன்னாட் பயின்ற சிவசிந்தனையின் பயனாகத்
திருவருளினாற் கூடுவதன்றி வேறெந்த வகையாலும் கைகூடாது. அவ்வாறு
சிந்திக்கவே சிவன் வெளிப்பட்டு அருளுவன்.
14. இடையறாமற் கும்பிட்டிருத்தல் வீட்டின்பமாம்.
மெய்ப்பொருணாயனார்
புராணம் முற்றிற்று.
6.
விறன்மிண்ட நாயனார் புராணம்
|
விரிபொழில்சூழ்
குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
-
திருத்தொண்டத் தொகை |
பேசும்
பொருமையவ் வாரு ரணையும் பிரானவனா
மீசன் றனையும் புறகுதட் டென்றவ
னீசனுக்கே
நேச னெனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்
வீசும் பொழிற்றிருச் செங்குன்ற மேய
விறன்மிண்டனே
-திருத்தொண்டர்
திருவந்தாதி |
|
|
|
|