| 618 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
அமைந்தது என்பதாம்.
மறையொழுக்கம் மறையவர்களிடம் இன்றும் பெரு
வழக்கில் நிலவுவது இந்நாட்டிலே காணப்பெறுவதாகும். அவர்கள்
நம்பூதிரிகள் எனவும் போற்றிகள் எனவும் பெறுவர்.
தில்லை மூவாயிரவர் போன்று, திருச்செங்குன்றூரிலும்
மூவாயிர
வேதியர்கள் இருந்தனர் என்றும் கூறுவர். “மனக்கொள்சீர் மூவாயிரவர்
வண்சிவனுமயனுந்தானு மொப்பார் வாழ், கனக்கொள்திண் மாடத்
திருச்செங்குன்றூரிற்றிருச்சிற்றாற் றங்கரையானை, யமர்ந்த சீர்மூவாயிரவர்
வேதியர்கள் தம்பதி யவனிதேவர்வாழ்“ என்ற நம்மாழ்வார் பாசுரங்கள்
காண்க.
வாழ்பதி ஆம்
- (செங்குன்றூர்) வாழும்பதி; அதுவே ஆகும் தன்மை
பெற்றது. வாழ்பதி - முக்கால வினைத்தொகை.
அவ்வாழ்வு முக்காலத்தும்
நிலைத்ததென்பதாம்.
பதி -
மக்களுள்ளத்தே தன் பெருமை பதிய நிற்றலாலும், பதியின்
மொழியாகிய மறைவழி நின்று உலகையும் பதியுன் வழி நிறுத்தும்
பெரியாரைத் தன்பாற் கொண்டு பதியின் பெருமை விளங்க நிற்றலானும்,
பதி என்ற பெயராற் குறித்தார். 3
| 494.
|
அப்பொற்
பதியி னிடைவேளாண் குலத்தை
விளக்க
வவதரித்தார்; |
|
| |
செப்பற்
கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய
கழல்
பற்றி
யெப்பற் றினையு மறவெறிவா; ரெல்லை தெரிய
வொண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையா ரெம்பிரானார்;
விறன்மிணடர்.
|
4 |
(இ-ள்.)
வெளிப்படை. அந்த அழகிய பதியிலே வேளாண் குலத்தை
விளக்கம் செய்ய அவதரித்தார்; சொல்லுதற்கரிய பெருஞ் சீர்த்தியுடைய
சிவபெருமானாரின் சேவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஏனைய
எல்லாப் பற்றுக்களையும் அறஎறிவார்; எல்லையிட வொண்ணாதார் உண்மை
யடியார்களிடத்து அன்புமிக உடையவர்; எமது பெருமானாராகிய
விறன்மிண்டர்.
(வி-ரை.)
பொன்பதி - பொன் - அழகு.
திருவுடைமையுமாம்.
இவற்றின் காரணம் முன்னர் உரைக்கப்பெற்றது.
வேளாண் குலத்தை விளக்க
- வேளாளர் என்ற குலம் இவர்
அதனுள் வந்தவதரிக்கப் பெற்றமையால் விளக்கமடைந்தது. வேளாளர்
குலத்திற்கு முன்னரிருந்த அளவிளாத பெருமைகளினும், திருத்தொண்டத்
தொகையை உலகம் பெற்றுய்தற்குக் காரணராயிருந்த இவரைத் தன்னுட்
பெற்றது அக்குலத்திற்கு மிகப் பெருமையும் விளக்கமும் தந்தது என்க.
“ஆசின் மறைக், கைப்படுத்து சீலத்துக் கவுணியர் கோத்திரவிளங்கச், செப்பு
நெறி வழிவந்தார் சிவபாத விருதயர்“ (திருஞான - புரா - 15), “கானவர்
குலம் விளங்கத் தத்தைபாற் கருப்ப நீட“ (கண் - புரா - 13) முதலிய
திருவாக்குக்கள் காண்க.
செப்பற்கரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் - செப்பற்கரிய
-
“உலகெலாமுணர்ந்தோதற் கரியவன்“ என முதற்கண்ணே ஒதினார்.
“யதோ
வாசோ நிவர்த்தந்தே“ - (எதினின்றும் வாக்குக்கள் திரும்பிவிடுகின்றனவோ)
- என்னும் மறைமுடியால் செப்பற்கருமை உணரப்படும்.
பெரும் -
மிகச்சிறியதும் செப்பரிதாமாதலின் அதனை விலக்கப் பெரும்
என்றார்.
சீர்த்தி - இச் சீர்த்திகளை மறைகள் பற்பலவாறு பேசித் திளைத்துணர்த்தும்
சிவம் என்ற சொல் இருத்தல் - கிடத்தல் எனப் பொருள் தருதலால், எங்கும்
இருப்பது - எங்கும் பதிந்து கிடப்பது எனப் பொருள் கொண்டு
சிவபெருமானது எல்லா மறியுந் தன்மை, ஒன்றாயும் வேறாயும் உடனாயும்
இருக்குந் தன்மை முதலிய பல சீர்த்திகளையும் மறைகள் பேசும்.
வேதங்களுள்ளே திருவுருத்திரமும், “மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகி“, “மண்ணல்லை விண்ணல்லை வலய
மல்லை மலையல்லை கடலல்லை வாயு வல்லை“, (வாகீசர்)
|
|
|
|