| விறன்மிண்ட நாயனார் புராணம் | 617 |
Periya Puranam
இருவரும்
மறைவழி நிற்பாரே யாவர். வேளாளர்கள் மறை சொன்ன
வழி ஒழுகுவர்; மறையோர் அம்மரபினர். மறையோர் தம்மதாகப்பெற்ற
நிலக்கிழவராயிருக்கவும், அவர்களை முன்னர்க் கூறாது, அவரின்
கீழ்க்குடிமைத் தலைநின்ற வேளாளரை முன்னர்க் கூறியது என்னை? எனின்,
மறையோராவர் அறுதொழிலாட்சி யாலே யருங்கலி நீக்கி- யுள்ளார்
என்றபடி அறுதொழில் உரிமையாகக் கொண்டு அவற்றானே வாழ்வு
நடத்துவார்; இந்நாட்டு மறையோர் அவ்வாரல்லாது உழவு வளத்தால்
வாழ்வார். மறையோர்க்கு யாண்டும் உழவுத்தொழிலுரிமையின்றாதலின்
அதற்கு உழவுக்குரிய வேளாண்குடிமையாளரின்றியமையாது முதற்கண்
வேண்டப்பெறுவர். வளத்தால் மன்னும் குலம்
என்றதும் காண்க.
குடிமைத்தலை நின்றோரே இவர்களை மன்னவைப்பர் என்றாயிற்று. உழுவா
ருலகத்தார்க் காணியஃ தாற்றா, தெழுவாரை யெல்லாம் பொறுத்து -
குறள்.
ஆதலின் அவர்களை முன்னர்க் கூறினார். அவர்களும் இவர்கள் போல
நாட்டு நிலத்தின் வாழும் உரிமை பெற்றாராதலுடன் அவர்கள் இந்நாட்டு
மக்கட்டொகுதியிற் பெரும்பான்மையோரும் இவர்கள்
சிறுபான்மையோருமாவர். மேலும் இப்புராண நாயகராகிய நாயனார்
வேளாளராதலும் ஒருகுறிப்புமாம். இக்குறியினைத் திருஞானசம்பந்த நாயனார்,
திருநீலநக்க நாயனார், சண்டீச நாயனார் முதலியோர் புராணங்களிலும்,
மற்றும் பலவற்றிலும் உய்த்துணர்ந்து கொள்க.
அன்னம் பயிலும் வயல்
உழவின் வளம் - அன்னங்கள்
வயல்களிற் பயிலுதல் நீர்வளங் குறித்தது. அன்னம்
- சோறு எனக்
கொண்டு, உழவின் வளத்தாற் சோறளிக்கும் பெருமை அந்நாட்டு இவ்விரு
மக்களிடையும் மிகப் பயின்று விளங்குகின்றது என்றலுமாம். மறையோர்
அன்னம் பயிலப் பெறுதல் இன்றைக்கும் இந்நாட்டிற் போல
வேறெந்நாட்டினும் காண்பரிதாம். உழவின் வளம் -
இந்நாட்டு வளம்
பலவற்றினும் வேறெந்த வளனும் உழவுவளனுக் கொப்பாக தென்பது குறிப்பு.
உழந்து முழவேதலை - குறள். உழவிலேமட்டில்
அமைந்த வளம் என்க.
பிரிநிலை ஏகாரம் தொக்கது. அமைந்த வளம் -
பிறதொழில்களினும்
வளங்கள் படினும் அவை அமையா வளமாம். ஆய்ந்த மறை -
உண்மைப்
பொருளை ஆய்ந்து ஆய்ந்து உணர்த்துகின்ற மறைகள். ஆய்தல்
-
தெரிந்து சிக்கறுத்தல். அவை சொன்ன நெறியாவது
இல்வாழ்வார் முதலிய
நிலையினர்க்கும், வேளாளர் முதலிய மரபினர்க்கும் விதித்தனவும்
விளக்கியனவுமாகிய நெறிகள். இவை திருக்குறள் முதலிய நீதிநூல்களில்
அறம் பொருள் இன்பம் என்ற முப்பகுதியினும் வைத்துக் காண்க.
ஒழுகும் தூய குடிமை
- ஒழுகுதலாற்றூய்மைபெற்ற குடிகளாகுந்
தன்மை. குடிமை - ஒன்றன் கீழ் நிலைத்து வாழும்
தன்மை. ஊர்க்குடி -
அடிக்குடி என்பன வாதி வழக்குக்கள் காண்க. கீதத்தை மிகப்பாடு
மடியார்கள் குடியாகப், பாதத்தைத் தொழநின்ற
பரஞ்சோதி பண்ணொன்ற
விசைபாடு மடியார்கள் குடியாக, மண்ணின்றி விண்கொடுக்கு
மணிகண்டன்
என்ற ஆளுடைய பிள்ளையாரது திருப்புள்ளிருக்கு வேளூர்த் தேவாரங்கள்
காண்க.
தலைநின்றார் - தலையிலே நின்றார்
- தலைமையிற் சிறந்து
நிலைபெற்றார். தலைநின்றார் - பெரியோர்
- உம்மைத் தொகை.
நின்றாரும் பெரியோரும் வாழ்பதி என்க.
நிலவுரிமையாளர் இவ்விருவருமே யாதலின் இவர்களைக்
குறித்தார்.
நால் வகைமரபில் முதலும் இறுதியும் கூறவே, இடைப்பட்ட மற்ற
இரண்டுமரபும் இவற்றுடன் கொள்ளப்படு மென்று கொண்டு, குறியில்
நான்கு குலத்தினரையும் இங்குக் குறித்ததாகக் கொள்வாருமுண்டு.
தலைநின்றாராகிய பெரியோர் எனப் பண்புத்தொடராகக் கூட்டி மறையவர்
என்ற ஒரு மரபினரையே குறித்ததாகக் கொள்வாரு முளர்.
குலத்தின்
- குலத்தினும். எச்சவும்மை தொக்கது. முன்கூறியவர்க்கு
மறை ஒழுக்கம் மட்டில் அமைந்ததாக, இவர்களுக்கு அதனுடன்
மறைக்குலமரபும் உடன்
|
|
|
|