பக்கம் எண் :


விறன்மிண்ட நாயனார் புராணம்629

Periya Puranam
பாடியபின் உடன் என்று கூறினார். முன்னர்ப் புறகு என்னவும், பின்னர்
உடன்
என்னவும் அவரே வல்லர் என்று பொருள் கூறுவாருமுண்டு.
இறைவனார் முதலடியாராய் அடியாருடனிருக்கும் சீர்மையைப் பெற்றுள்ளது
(இத்-தொகை) என்றால் என்றுரைப்பாருமுண்டு. ஞாலமுய்ய என்பது
வேதநெறி என்றும், நாமுய்ய என்பது ஆகமநெறியாகிய பத்திநெறி என்றும்,
இவ்விரண்டின் சீலங்களை உலகுக் குணர்த்துவது சைவநெறி என்றும்,
வேதநெறியால் வாக்கும், சைவநெறியால் காயமும், பத்திநெறியால் மனமும்
நெறிப்பட்டொழுகும் முறை காட்டுவது திருத்தொண்டத்தொகை என்றும்
இங்கு விசேடங் கூறுவாருமுண்டு.

     என்றால் - என்று காண்போமானால், ஆலமமுது செய்தபிரான்
அடியார் பெறுமை
- மரணத்தைத் தரும் விடத்தினையே மரணம் போக்கும்
அமுதமாகச் செய்தவன் “ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்“ என்றது
திருக்கோவையார். அமுது செய்த - உண்ட என்றலுமாம். ஆலத்தை
அமுதமாகச் செய்ததுபோல், புறகு என்ற தீயமொழியினைக் கொண்டே
திருத்தொண்டத்தொகையினையும், அடியார் உடனாம் உளது என்ற
அருண்மொழியினையும் ஆக்கிய அருளாளன் என்பது குறிக்க இங்கு
இச்சிறப்பாற் கூறினார்.

     பிரான்அடியார் பெருமை
- விறன்மிண்டரது பெருமை. ஆலத்தை
அமுதமாக்கிய தமது பிரானைப்போலவே, புறகு என்ற நம்பிகளைப்
பேரடியாராகவும் தேசமுய்யத் திருத்தொண்டத்தொகை முன்பணித்த
ஆசாரியராகவும் ஆக்கிய பெருமையுடையார் என்பது குறிப்பு. அடியார்
என்று பொதுப்படக் கூறியதனால் இது போன்ற எல்லா அடியார்களது
பெருமையுமாம் என்பதும் குறிப்பு.

     பிரான்அடியார்
- இங்குத் தேவாசிரியனிலே இருந்து புறகென்ற
விறன்மிண்டர் பெருமை என்றும், அங்கு அம்மொழி கேட்டுப் பிழை
யுடன்பட்டார் போன்று உடனாம் உளது எனவும், தனித்தனி வேறு அடியேன்
எனவும், கூறிய பிரானும் அடியாரும் (நம்பிகளும்) ஆகிய இவர் பெருமை
என்றும் இருதிறமும் குறிக்க வைத்த அழகும் காண்க. யார் என்ற வினா
ஒருவருமிலர் என்ற எதிர்மறை விடை குறித்தது.

     உடனா முளமென்றால்
- என்பது பாடம். 9

500. ஒக்க நெடுநா ளிவ்வுலகி லுயர்ந்த சைவப்
                           பெருந்தன்மை
 
  தொக்க நிலைமை நெறிபோற்றித் தொண்டு பெற்ற
                           விறன்மிண்டர்
தக்க வகையாற் றம்பெருமா னருளி னாலே
                            தாணிழற்கீழ்
மிக்க கணநா யகராகுந் தன்மை பெற்று
                           விளங்கினார்.
10

     (இ-ள்.) வெளிப்படை. இதுபோலவே பலகாலம் இவ்வுலகிலே உயர்ந்த
பெருந்தன்மைகள் யாவும் கூடிய நிலையாகிய சைவநெறியினைப் பாதுகாத்துத்
திருத்தொண்டு செய்யும் பேறு பெற்று வாழ்ந்த விறன்மிண்ட நாயனார்
தமது திருத்தொண்டினுக்குப் பொருந்திய வகையினாலே கணநாயகராகும்
நிலைமையினைப் பெற்றுத் திருவடிநிழற்கீழ் விளங்கினார்.

     (வி-ரை.) ஒக்க - மேலே கண்ட வகைகளைப் போலவே.
பெருந்தன்மை தொக்க சைவநெறி என மாற்றுக. பெரியன யாவையும்
தொகுதியாகக் கூடிய நெறி சைவநெறியேயாம் என்பது. இது திருத்தொண்டத்
தொகையாற் போந்த நெறி குறித்தது.

     நிலைமை நெறி
- நிலைமையே இந்நெறியாம் என்க.

     போற்றி - பாதுகாத்து. துதித்து என்றலுமாம்.

     தொண்டு பெற்ற - நெறி போற்றுதலாகிய திருத்தொண்டினைச்
செய்யும் பேறு பெற்ற. பெற்ற - “திருக்கூட்டத் தெதிர்முன்பரவு மருள்
பெற்றே யிறைவூர் பாதந் தொழப் பெற்றார்“ (495), “புறகென் றுரைப்பச்
சிவனருளாற் பெருகா