பக்கம் எண் :


628 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     நாம் உய்ய நாம் - அத் திருத்தொண்டத் தொகையினை அருளிய
நம்பிகளைப் பரமாசாரிய மரபிலே வைத்துத் தொழுதொழுகும்
அடியார்களாகிய சைவ சித்தாந்த மரபினர். நம்பிகளது தொகைக்கு
விரிநூலாகிய இப்புராணத்தைக்கேட்டு அநுசந்திக்கும் நாம் என்றலுமாம்.
ஆசாரியரது உபதேசப் பயன் முதற்கண்ணே அவரை ஆசாரியராகக்
கொண்டொழுகும் பரம்பரையினர்க்கே யாகும்; ஆதலின் சீலமுய்ய
என்றதற்கடுத்து நாம் உய்ய என்றார்.

     ஞாலம் உய்ய - சைவ மரபொன்றே “தாமின் புறுவ துலகின்
புறக்கண்டு காமுறு வதாகலின் அதனை அடுத்து நம்மால் சைவ சித்தாந்த
மரபினாலே ஞாலமுய்ய என்றார். என்னை? “நான் பெற்ற வின்பம்
பெறுகவிவ் வையகம்“ (திருமூலர் திருமந்திரம்), “ஆழ்க தீயதெல் லாமர
னாமமே, சூழ்க வையக முந்துயர் தீர்கவே“ (ஆளுனுடைய பிள்ளையார்
திருப்பாசுரம்), “மன்று ளாரடி யாரவர் வான்புகழ், நின்ற தெங்கு நிலவி
யுலகெலாம்“ (பெரியபுராணம்) முதலிய பெருந் திருவாக்குக்கள் சைவ
மரபினன்றி மற்றுக் காண்ட லரிதாமென்க. “திருத்தொண்டத் தொகையா
லுலகுவிளங்க“ (501) என்றதும் காண்க.

“பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்த னிறைபுகழா
னேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழின்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே“

- 11-ம் திருமுறை ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - 80

என்ற நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கும் இங்கு வைத்துக் கருதத் தக்கது.

     முன்பாட - தேவாசிரியனில் எழுந்தருளிய திருக்கூட்டத்தின் முன்னர்.
“தூரததே திருக்கூட்டம் பலமுறையாற் றொழுதன்பு, சேரத்தாழ்ந்தெழுந்தருகு
சென்றெய்தி நின்று
“ (347), “வன்றொண்டா பாடியவ ரெதிர் பணிந்தார்“
(348) என்பன காண்க. செழுமறைகள் - செழு - நாதத்திற் செழித்த.

     ஓலமிடவு முணர்வரியார் - “மயக்கறு மறையோலிட்டு மாலயன் றேட
நின்றான்“ (432)உரை பார்க்க. பலவாறு சொல்லியும், அன்மைச்
சொல்லினாற்றுதித்தும், முடிவு காணாது இளைத்துச் சாந்தி வாசகத்துடன்
நின்று விடுவது மறை யென்ப.

     “அடியார் உடன் நாம் உளது என்றால் - நாம் உள்ளது
அடியார்களுடனேயாம். விறன்மிண்டர் உரைத்தபடி நாம் இருப்பது
அவர்களுக்குப் புறம்பேயன்று, உடனே யாம், என இறைவன் கூறியருளியபடி.
இது இறைவன் அடியாருடனே கலந்து நிற்கும் அத்துவிதத் தன்மை குறித்தது.
ஆயின் இறைவன் எங்கும் கலந்து நிற்றலின் இந்நிலை
அடியார்களுக்குமட்டுமே யன்றி எல்லார்க்கு மொக்குமே? யெனின் ஒவ்வாது;
அடியார்களுடன் வெளிப்பட உடனாய்நிற்பன் என்க. அவருரை
தனதுரையேயாக உரைப்பன்; அவர் செயல் தன் செயலேயாகச் செய்வன்;
அவர் கரணங்களைத் தனது சிவகரணங்களே யாக்குவன். “தான் செய்யுந்
தன்மைகளும் ஆக்கியிடு மன்பர்க்கவன்“ என்பது சாத்திரம். இவ்வாறு
கலந்துள்ளமையாலே அடியாருடன் உள்ளதன்றித், “தில்லைவா ழந்தணர்தம்
அடியார்க்கு மடியேன்“ என முதல் எடுத்துக் கொடுத்ததனாலும் இறைவன்
அடியாருடன் உளராயினர். தில்லைவாழ் அந்தணர்களின் இறைவன்
ஒருவராதலையும், அடியேன் என்றதையும் குறிக்க.

     வன்றொண்டன் புறகென்றுரைப்ப, புனைந்தார்க்கும் புறகென்றுரைப்பப்
பெற்றார்; (அதற்கு) நம்பி தொகைபாட, அரியார் அடியாருடனாம்
உளதென்றால் பெருமை அறிந்தாரார்? என 497, 498, 499 பாட்டுக்களை
முடித்துக் கண்டு கொள்க.

     இவ்வாறன்றித், தொகை முன்பாட (விறன்மிண்டர்) “அடியார் உடனாம்“
என்றது உளதாயிற்று. அதாவது தொகைபாடு முன் புறகு என்ற அவரே, அது