பக்கம் எண் :


விறன்மிண்ட நாயனார் புராணம்627

Periya Puranam
     இனியார் மற்றுப் பெருமை கூறுவார்? - என மாற்றுக. இனி -
இதன் மேலும் - இனியும்; மற்று - வேறுமொரு; யார் கூறுவார் என்றது
யாவரும் கூற வலியிலர் எனக் குறித்தது. இவ் வினாவழக்கின் உறுதிப்பாடு
முன்னர் உரைக்கப்பட்டது.

     இனியார் பெருமை கூறுவார் - இனியவர்களாகிய அடியவர்களது
பெருமை கூறுவாராயினும் என்றலுமாம். அவர்பாற் கோணா வருளைப் பெற்ற
தெங்ஙனமெனில் இறைவரே அடியார் பெருமைகளை எடுத்துச் சொல்லவும்
(341, 342), திருத்தொண்டத் தொகைக்கு முதலெடுத்துக் கொடுக்கவும் (345),
நம்பிகள் தொகை பாடித் துதிக்கவும் (347) உள்ள நிலை பெற்றதாம்.
திருத்தொண்டத் தொகையிலே பிரானும் நம்பிகளும் அடியார் பெருமை
கூறியது காண்க. 349 உரை பார்க்க. இனி யார் - அடியவர்கள். “இகத்தும்
பரத்து மினியார்“ - சிறுத்தொண்டர் புராணம் -77.

     இங்கு நாயனார் நம்பியை யாண்ட இறைவனுக்கும் புறகு என்றது
தீயதன்றோ எனின், அஃது அடியார்பாற் சென்ற பத்திமையின் திண்மை
யொழுக்கத்தால் உளதாயிற்று; அன்றியும் அவ்வாறு சொல்லும்
அடியார்பத்தியின் உறைப்புடைய அடியாரும் உளர் என உலகிற்கு இவர்
மூலம் அறிவுறுத்த இவர் வாக்கில் அவ்வாறு நிகழ்த்தச் செய்தது இறைவன்
திருவுள்ளம் போலும். ஆதலின் பிரானும் புறகென்றுரைப்ப அருளைப்
பெற்றார் என்றார். “ஈசனோ டாயினும் ஆசையறு மின்கள்“ என்ற
திருமந்திரமும் இங்குச் சிந்திக்கத் தக்கது.

     மற்று இரண்டும் அசையென்றொதுக்குவாறு முண்டு. 8

499. ஞால முய்ய நாமுய்ய நம்பி சைவ நன்னெறியின்  
  ஓசீலமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பாடச்
                             செழுமறைகள்
லமிடவு முணர்வரியா “ரடியா ருடனாமுள“
                               தென்றால்,
ஆல மமுது செய்தபிரா னடியார் பெருமை
                             யறிந்தாரார்?
9

     (இ-ள்.) வெளிப்படை. உலகம் உய்ய, நாம் உய்ய, சைவ நல்வழியினது
சீலம் உய்யத் திருத்தொண்டத் தொகையை முன்னே நம்பிகள் பாடச், செழிய
மறைகள் ஓலமிட்டும் உணர்தற்கரியாராகிய சிவபெருமான் “நாம் உள்ளது
அடியார்களுடனே யாம்“ என்று சொல்வாரானால், விடத்தை அமுதமாக்கிய
இறைவனடியார் பெருமையை யாவர் அறிந்தவர்கள்?

     (வி-ரை.) திருத்தொண்டத்தொகை நம்பி பாட என்று
மாற்றிக்கூட்டுக. தொகை பாடியதனாற் சைவ நன்னெறியின் சீலம் உய்ந்தது;
அது உய்யவே நாம் உய்ந்தோம்; நாம் உய்யவே ஞாலமும் உய்ர்தது என்று
காரியகாரணத் தொடர்பு படுத்துக.

     சைவ நல் நெறி - நல் - இடைப்பிறவரல். 467 பார்க்க. நெறியின்
சீலம்
- அதன் நல்லொழுக்கம்; இங்கு அடியார் பணியைக் குறித்தது.
அதுவே இப்புராணத்தினுள் எடுத்துக்காட்டப்பெறும் உயர் குறிக்கோளாம்.
உண்மை நுல்களின் உட்குறிப்புமாம். “ஞாலந் தான்பர வப்படு கின்ற
நான்மறை யங்க மோதிய நாவன், சீலந் தான் பெரிதும் மிகவல்ல
சிறுவன்வன் றொண்டன்“ - சுந்தரர் - தக்கேசி - திருவொற்றியூர் - 10.

     சீலம் உய்ய - இவ்வொழுக்கம் உலகத்திலே நிலை பெற.
நிலைபெறுதல் திருத்தொண்டத் தொகையினால் உண்டாயது என்பதாம்.
சீலம் நிலைபெறுதலாவது, “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமு மினியெதிர்
காலத்தின் சிறப்பும், இன்றெழுந்தருளப் பெற்றபே றிதனா லெற்றைக்குந்
திருவளுடையேம்“ (திருஞா - புரா - 659) என்று குலச்சிறை நாயனார்
ஆளுடைய பிள்ளையாரைத் துதித்தவாறு, திருத்தொண்டத் தொகை
பாடப்பெற்ற அதனால் எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் உள்ள எல்லா
அடியார்களும் துதிக்கப் பெற்றார்கள். அதனாலே அவர்களெல்லாருடைய
திருவருளுக்கும் எவ்விடத்தும் எஞ்ஞான்றும் இதனைத் துதித்
தார்களெல்லாரும் இலக்காகி உய்கின்றனர் என்பதாம்.