விறன்மிண்ட நாயனார் புராணம் | 631 |
Periya Puranam
சுருக்கம்
:- சிவபெருமானைப் பரவிப் பரசுபெற்ற பரசிராமர் பெற்ற
நாடு சேரர்களுக்குரிய மலைநாடாம். அதில் திருச்செங்குன்றூர்
பழைமையாகிய செழித்த ஊர். அவ்வூரில் வேளாளர் மரபிலே குல விளக்காக
அவதரித்தவர் விறன்மிண்ட நாயனார். அவர்
சிவபெருமான் திருவடியே
பற்றாகக் கொண்டு மற்றப் பற்றுக்களை யெல்லாம் அறவெறிவார்;
மெய்யடியார்களிடத் தன்புடையார்; இறைவன் எழுந்தருளிய தலங்கள் தோறும்
சென்று வழிபடும் ஆசையாற் புறப்பட்டுச் செல்வாராய் அங்கங்கும் அடியார்
திருக்கூட்டத்தை முன்னர்ப் பணிந்து பின்னர் இறைவரைப் பணியும் நியதி
பூண்டவர். இவ்வாறு செல்பவர் மலைநாடு கடந்துசென்று சிவதலங்கள்
பலவற்றையும் வணங்கி அங்கங்கும் அடியார் பத்தியாகிய திண்ணிய
ஒழுக்கநடை செலுத்தித் திருவாரூரையடைந்து பணிந்திருந்தார். அங்குத்
தினமும் இறைவனைத் தொழுது செல்லும் நம்பி ஆரூரர் ஒருநாள்
தேவாசிரியனில் எழுந்தருளிய அடியார்களைத் தொழுது வந்தணையாது
மனத்துட்கொண்டே ஒருவாறு ஒதுங்கி, நேரே இறைவனைத் தொழத்
திருக்கோயிலினுட் சென்றனர். அதுகண்டு, விறன்மிண்ட நாயனார்,
வன்றொண்டர் புறகு என்றும்,
அவருக்குப் பிரானாகிய இறைவனும்
புறகு என்றும் திருவருளாலே உறைக்கப்பெற்றார். அதனால் உலகமுய்ய
நம்பிகள் திருத்தொண்டத்தொகை பாடித் திருக்கூட்டத்தைத்
தொழுதணைந்தார். இறைவனும் அடியார் உடன் நாம் உளது என்றருளினர்.
எம்பிரானடியார் பெருமை யாவரே அறியவல்லார்?
இவ்வாறு பலநாள் சைவநெறி பாதுகாத்துத் திருத்தொண்டு
செய்திருந்த
விறன்மிண்ட நாயனார் அதற்குத் தக்க வகையினாலே, திருவருளினாலே,
மேன்மையுடைய கணநாயகராகும் தன்மை பெற்று, இறைவர் திருவடிக்கீழ்
வாழுமின்பம் பெற்று விளங்கினார்.
திருத்தொண்டத்தொகை பெற்றதனாலே உலகம் விளங்கக்
காரணராகிய
விறன்மிண்ட நாயனாரது பெருமையைச் சொல்லும் அளவு எம் அளவினுள்
அமையுமோ? அமையாது.1
1
நாயனார் சரிதத்தின் தலவழக்குக் குறிப்புக்கள்.
நாயனார் திருவாரூரில் மடவளாகம் வடக்குத் தேர்
வீதியில் அவரது
மடம் என்று இப்போதும் வழங்குகிற இடத்தில் திருமடம் அமைத்து
வாழ்வாராயினர். திருவாரூரையும், அவரை யாண்ட தியாகேசரையும்
புறகென்று நாயனார் சொல்லியபின், திருக்கோயில் இரண்டாம்
ஆவரணத்தின் மதிற்சுவரை ஒட்டி வடக்குத் திருவாயிலுக்கு நேரே
தியாகேசர் வன்றொண்டர்க்குக் காட்சி தந்தருளினர். அதனைக் குறிக்க
இப்போது அங்கு ‘ஒட்டுத் தியாகர் கோயில்' என்றொரு சிறு ஆலயம்
உண்டு. இதனை நினைத்தே நம்பிகள் ஒட்டி யாட்கொண்டு போயொளித்
திட்ட உச்சிப் போதனை என்று பதிகத்திற் குறித்தனர் போலும். இவ்வாறு
ஒளிந்து ஒட்டிக் காட்சி தந்தது கண்ட விறன்மிண்டர் வெகுண்டு,
திருவாரூரில் இனி அடியெடுத்து வைப்பதில்லை என்று சூள் உரைத்து
மனைவியாருடன் திருவாரூரினின்றும் புறப்பட்டு அதன் எல்லைகடந்து
வடக்கே புத்தாற்றங் கரையில் ஒரு பந்தல் அமைத்து அங்கே அடியவர்
பூசை நடத்தி வந்தார். அந்த இடமே இப்பொழுது ஆண்டிப்
பந்தல் என
வழங்குவது. திருவாரூர் - நன்னிலம் பாதையில் திருவாரூரிலிருந்து 5 நாழிகை
யளவில் உள்ளது. இப்படியிருக்கும் நாளில் வரும் எந்த அடியாராவது
திருவாரூர் என்றால் அவரது கால்களை மழுவினால் வெட்டும் சபதம்
பூண்டிருந்தார். ஒரு நாள் இறைவரே அடியராக எழுந்தருளி வந்து,
நாமிருப்பது நிறை செல்வத் திருவாரூர் என்ன, அவரது கால்களைத்
துணிப்பதற்கு மழுவுடன் நாயனார் துரத்த, அவர் முன்னே ஓட, இருவரும்
திருவாரூர் எல்லைக்குள் வந்து சேர, அவர் வந்தோ மிப்பால் என்று
சொல்லியிருந்தனர். தாம் சபதங்கடந்தமையால் நாயனார் தம் கால்களைத்
தாமே வெட்டிக் கொண்டனர். இறைவர் மறைந்து, நாயனார்க்கும்
மனைவியார்க்கும் காட்சி தந்து பேறளித்தனர். அந்த இடத்தில் நாயனாரது
திருவுருவமும் காட்சி தந்த கோலமும் உள்ளன.
|
|
|
|