பக்கம் எண் :


632 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     தல விசேடம் :- திருச்செங்குன்றூர். திருவாங்கூர் இராச்சியத்திலே
கொல்லம் என்ற மேற்கடற் றுறைமுக நிலயத்திலிருந்து கிழக்கே 10
நாழிகையளவிலும் தென்காசியிலிருந்து 48 நாழிகையிலும் உள்ளது
கொட்டாரக்கரை என்ற இருப்புப்பாதை நிலயம். அங்கு நின்றும் வடக்கே
போகும் பெருவழி (Central trunk Road) என்ற கற்சாலை வழியாய் 25
நாழிகையளவில் இது அடையத்தக்கது. கோட்டயத்துக்கும் கொட்டாரக்
கரைக்கும் இடையில் உள்ளது. வடக்கிலிருந்து கொச்சி வழியாய்
வருகின்றவர்கள் எர்ணாகுளம் என்ற இருப்புப்பாதை நிலையத்திலிருந்து
தெற்கில் மேற்குறித்த பெருவழியிலே ஏற்றுமானூர் (ஏற்றின்மேல் -
இடபத்தின்மேல் - வரும் சிவனர்) - கோட்டயம் - செங்கணச்சேரி -
திருவில்லா - என்ற ஊர்களைக் கடந்து திருச்செங்குன்னூரை அடையலாம்.
எர்ணாகுளத்திலிருந்து ஏறக்குறைய 55 நாழிகை யளவு தூரமுண்டு.
இருவழியும் மோட்டார் பஸ் வசதியுண்டு. பரசிராமர் கண்டு வேதியர்க்களித்த
இந்நாட்டு 64 ஊர்களில் இவ்வூர் தெற்குக் கோடியில் உள்ளது. இதனை
இப்போது செங்கண்ணூர் என மலையாளர் வழங்குவர். சிவாலயமும் அதில்
உள்ள பகவதி என்ற அம்மையார் ஆலயமும் 1பிரசித்தம். விரிவுகள்
திருவிதாங்கூர் சமஸ்தான வெளியீட்டில் (Travancore State Manual)
கண்டு கொள்க. இது ஒரு வைப்புத்தலம். “கொடுங்கோளூரஞ்சைக்களம்
செங்குன்றூர்“ என மலைநாட்டுத் தலங்களை வரிசைப்படுத்தி அப்ப
மூர்த்திகள் திருத்தாண்டகத்தில் கூறியது காண்க.

     491 பாட்டிலே கூறியபடி பரசிராமன் பெற்ற நாடாகிய மலைநாடு
முற்காலத்திலேதமிழ் மூவேந்தர்களில் ஒருவராகிய சேரர்குல மன்னர்களால்
ஆளப்பெற்றுச்



“வந்தோமிப்பால்“ என வழங்கிய அவ்விடம் இப்போது
“வெண்டாம்பாலை“ என மருவி வழங்குகின்றது. வடக்குத் திருவாரூர்
எனவும், தென்திருவாரூர் எனவும் இரண்டு வேறு பகுப்புடையது
திருவாரூராகும். இன்றும் அரசாங்கக் கணக்கில் இரண்டும் வேறு
கிராமங்களாகப் பதிவு செய்துள்ளார்கள். இப்போது திருவாரூர் என
வழங்குவதும், பூங்கோயில் என்னும் திருக்கோயில் அமைந்துள்ளதும்
தென்திருவாரூராம். “தென்திருவாரூர்புக் கெந்தைபிரானாரை யென்றுகொல்
லெய்துவதே“ என்ற நம்பிகள் தேவாரம் காண்க. வடதிருவாரூரின்
தெற்கெல்லையாவது திருவாரூரின் வடக்கில் இராசாத் தெரு (சம்பந்தமூர்த்திப்
பிள்ளையார் தெரு)வுக்கு வடக்கேயுள்ள வாய்க்காலேயாம். அதிலிருந்தே
வடக்கே வெண்டாம்பாலை வரை வட திருவாரூராம். இங்குக் கால்வாய்க்கு
வடக்கே சில தெருக்களும், புதுத் தெருவும், காலிமனைகளும் உண்டு.
ஏனையவெல்லாம் கழனிகளாக மாறிவிட்டன.

     இக்குறிப்புக்கள் சைவத் திருவாளர் திருவாரூர்ப் போலீசு
இன்ஸ்பெக்டர் துடிசைக்கிழார் அ. சிதம்பரனாராற் றரப்பெற்றன. குறிப்பு :-
இவற்றிற் புராணத்துடன் மாறுபடாதன கொண்டு ஏனையவற்றைக் கர்ண
பரம்பரை வழக்கென்று விடுக்க (பதிப்பாசிரியர்)

     1பகவதி உற்சவமூர்த்திக்கு 28 நாள் கொண்ட விசேடத் திருவிழா
உண்டு. ஓராண்டில் எட்டு அல்லது பத்துமுறை பூப்பு உற்சவம் என்றதொரு
சிறப்பும் உண்டு. அக்காலத்தில் அந்த உற்சவ மூர்த்தியின் வஸ்திரத்தில்
பூப்புக்கறைகள் காணப்படுமாம். அக்காலத்து மூன்று நாட்கள் கோயில்
திருக்காப்பிட்டு அம்மூர்த்தியை வெளியே உரிய இடத்து வைத்திருந்து
பிற்றை நாள் அபிடேக முதலிய சுத்தங்கள் செய்து முடித்துக் கோயிற்பூசை
நடத்துவது வழக்கம். இதன் புதுமை நோக்கிய (Col. Munro) மன்ரோ
என்ற அரசாங்க அதிகாரி இதனை நம்பாமல் இதற்குரிய செலவை
அனுமதிக்க மறுத்தனர் என்றும், பின்னர் இதன் உண்மையை உரியவர்களாற்
றெளிந்து கொண்டு இச்செலவைப் பதிவு (நிரந்தரத் திட்டம்) எழுத
உத்தரவிட்டார் என்றும் வரலாறு கேட்கப் பெறுகின்றது. விரிவுகள்
Travancore Manual vol. II Chapter VIII Religion என்ற இடத்துப்
பார்க்க.