விறன்மிண்ட நாயனார் புராணம் | 633 |
Periya Puranam
சேரநாடு
என்ற பேரால் அறியப்பெற்று முழுத் தமிழ்நாடாயிருந்தது. இதனை
ஆண்ட சேரன் செங்குட்டுவனும், அவரது இளவலாகிய இளங்கோவடிகளும்,
சேரமான் பெருமாணாயனாரும், மற்றும் பிறரும் பழுத்த செந்தமிழ்
மன்னர்களேயாம். சேரமான் பெருமாணாயனாருக்குப் பின், இப்போதைக்கு
ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன், தமிழ் மொழியினின்றும் பிறந்து
ஆரியத்துடன் கலந்த மலையாள மொழி பேணும்
நாடாக இந்நாடு மாறி
நடைபெற்று வருகின்றது.
பரசிராமன் நாடு பெற்ற வரலாறு 491 பாட்டில் கீழ்க்
காண்க.
மொய்த்த சீர் முந் நூற்றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு நுனக்கு,
வொத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி யோங்கு நின்றியூரென் றுனக்
களிப்பப், பத்தி செய்தவப் பரசிராமற்குப் பாதங் காட்டிய நீதி (தக்கேசி)
என்ற நம்பிகள் தேவாரத்திற் கூறியது இப்பரசிராமர் வேதியர்க்கு நாடு தானங்
கொடுத்த செய்தியைக் குறித்ததோ? அன்றி, அப்பதிகத்தாற் போற்றிய
திருநின்றியூரைப் பற்றியதோர் தலசரிதமோ என்பதாராயத்தக்கது.
அப்பரசிராமர் இவர் தாமோ என்பதும் ஆராயத்தக்கதாம்.
இத்தலம் கொங்கு நாட்டுத் தலமாகிய
திருக்கொடிமாடச்
செங்குன்றூர் என்ற திருச்செங்கோடு
என்பதனோடு ஒன்றாய்
மயங்கற்பாலதன்று.
கற்பனை :- தவத்தின் வலிமை பெரிது.
சிவபெருமானை நோக்கிச்
செய்யும் தவங்கள் எவராலும் மாற்றொண்ணாத பெரும் பயன்களைத்
தாவல்லன. இவ்வாறு இங்குப் பரசிராமர் நோற்றுப் பெற்ற பரசாயுதத்தின்
தடுக்கலாகாத பெருவலிமையளத்தற்கரிது. கந்தபுராணம், பாரதம்,
இராமாயணம் முதலிய இதிகாசங்களிலே அவ்வவரும் சிவன்பாற் பெற்ற
பெரும் படைக்கலங்களே பெருவலி படைத்தன என்பது நன்குணரலாம்.
இத்தவத்தாலே பகைவரைவெல்லல், நாடு பெறுதல், விண்ணவரை யேவல்
கொள்ளுதல் முதலிய பலவும் பெறலாம். இது பற்றியே அவன் றவஞ்
செப்பற் பாற்றோ? என்பது முதலாகக் கந்தபுராணம் முதலியவற்றுள் இத்தவ
வலிமை விதந்து பேசப் பெறும்.
2. வேளாளர் மறை சொன்ன வழியொழுகிக் குடிமையின்
றூய்மையில்
நிற்க.
3. சிவன் கழற் பற்றினையே பற்றுக. பிற பற்றுக்களை
அத்துணைகொண்டு எறிக.
4. சிவனாரது உண்மை யன்பர்களிடத்துப் பத்திசெய்து
பணிந்தொழுகுக.
சிவஞானிகளுடன் கூடுக; சிவனன்பர்களைச் சிவனெனவே கொண்டு வழிபடுக;
தம்முடன் இணங்குவோர்களைச் சிவனை மறப்பித்துத் தீய நெறியிலே
செலுத்திப் பிறவியிலே வீழ்த்தும் அஞ்ஞானிகளோடு இணங்கா தொழிக.
மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ் சிறப்பில்லார் தந்திரத்துச்
சேர்வை - யறப்பித்துப், பத்தரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரும்,
மெய்த்தவரை மேவா வினை என்ற சிவஞான போதம் காண்க.
5. சிவனடியார்கள், இறைவனைப் பணியு முன்னர்ப் பேணிப்
பணியத்தக்கார்.
6. அடியாரைத் தொழாது இறைவனை வணங்குவோர் திருக்கூட்டத்தை
இகழ்ந்தவராகித் திருக்கூட்டத்திற்குப் புறம்பாகு நிலையினர்.
7. அடியார் பத்தி கொண்டொழுகுவோர் தன்மையும் தன்னா
லாட்
கொள்ளப் பெற்றாரையும் புறகு எனினும், தம் அடியார்பால் வைத்த
அருளினாலே அதற்கும் மகிழ்ந்து அருள் கொடுத்து உடன் வீற்றிருக்கும்
பெருங்கருணையாளன் சிவன்.
8. அடியார் பத்தியின் வசப்பட்டுச் செய்யப்படும்
செயல்கள் குற்றமாகா.
அச்செயல்கள் சிவன் றானே ஆவேசித்துச் செய்தனவாம்.
9. சிவதல யாத்திரை செய்தல் சிறந்தது. அது எல்லா
நலன்களையுந்
தரும்.
10. திருத்தொண்டத் தொகையானது உலகம் உய்யத் தந்த
பெரும்
பேறாகும்.
விறன்மிண்ட
நாயனார் புராணம் முற்றும்
|
|
|
|