7.
அமர்நீதி நாயனார் புராணம்
|
அல்லிமென்
முல்லையந்தா ரமர்நீதிக் கடியேன்
-
திருத்தொண்டத்தொகை |
மிண்டும் பொழிற்பழை
யாறை யமர்நீதி வெண்பொடியின்
முண்டந் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவண
நேர்
கொண்டிங் கரு ளென்று தன்பெருஞ் செல்வமுந் தன்னையுந்தன்
நுண்ட மதிநுத லாளையு மீந்த தொழிலினனே.
-
திருத்தொண்டர் திருவந்தாதி - 7 |
502.
|
சீரி
னீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக் |
|
|
காரின்
மேவிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரி னீடிய பெருமைசேர் பதிபழை யாறை. |
1 |
புராணம்
:- நிறுத்த முறையானே, இச்சருக்கத்து ஏழாவது
அமர்நீதியார் என்ற பேருடைய நாயனாரது புராணங் கூறத் தொடங்குகின்றார்.
இது அவரது சரித வரலாறும் பண்புங் கூறும் பகுதி.
தொகை :-
அகவிதழ்களோடு கூடிய மெல்லிய முல்லை மலர்மாலை
யணிந்த வணிகர் குலத்தவராகிய அமர்நீதி நாயனாருக்கும் நான்
அடியேனாவேன்.
அல்லி - அகவிதழ். (புல்லி - புறவிதழ்.)
புறவிதழ் வேறாக இல்லாமல்
முற்றும் அகவிதழ்போல அமைந்தது முல்லை மலரின் சிறப்பிலக்கணம்.
அகமும், புறமும் ஒன்றேயாயிருக்கும் அமர்நீதியாரின் பெருமை குறிக்க இச்
சிறப்பினாற் கூறினார். உள்ளந்தா ணின்றுச்சி யளவு நெஞ்சாய் என்ற
திருவாசகக் கருத்தும் காண்க. முல்லை - வணிகர்க்குரிய
அடையாள
மாலையாம். இதனால் நாயனாரது மரபும் இயலும் குறித்தபடி. மென்முல்லை
- முல்லைமலர்கள் மிகமென்மையுடையனவாயினும் மணமிக்கனவும்,
நெடுநாணின்றுபூத் தருவனவும், மலர் மிகத் தருவனவுமாம்.
செல்வம்
மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனுங் குற்றலம்
-
குறிஞ்சி - 3 |
என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரங் காண்க. தார் -
இன்பத்திற்குரியதோர் அடையாள மாலை.
வகை
:- மீண்டும்.....அமர்நீதி - நெருங்கிய
சோலைகள் சூழ்ந்த
பழையாறையில் அவதரித்த அமர்நீது நாயனார்; வெண்பொடியின்....பிராற்கு
- திருவெண்ணீற்றைத் திரிபுண்டரமாக நெற்றியிலே தரித்த சிவபெருமானுக்கு;
நல்லூரின் - திருநல்லூரிலே; முன்......என்று
- முன் நீர் என்னிடம் தந்து
வைத்த கோவணம், வைத்த விடத்தினின்று காணாமற் போய்விட்டதனாலே,
அதற்கு நேராக உள்ள பொருளினைக் கொண்டு இங்கு என்பிழை
பொறுத்தருள வேண்டுமென்று; தன் - தொழிலினனே
- தம்முடைய
பெருஞ் செல்வங்களையும், தம்மையும், தமது பிறைபோன்ற நெற்றியையுடைய
மனைவியாரையும் துலையிலேற்றித் தந்த தொழிலுடையவரேயாம்.
|