|
றனையி
டக்கொடு தனித்துலை வலங்கொண்டு
தகவா
லினைய செய்கையி லேறுவார் கூறுவா ரெடுத்து, |
42 |
544.
|
இழைத்த
வன்பினி லிறைதிரு நீற்றுமெய் யடிமை |
|
|
பிழைத்தி
லோமெனிற் பெருந்துலை நேர்நிற்க!
வென்று,
மழைத்த டம்பொழிற் றிருநல்லூரிறைவரை
வணங்கித்
தழைத்த வஞ்செழுத் தோதினா; ரேறினார்
தட்டில்.
|
43 |
543.
(இ-ள்.) வெளிப்படை.
மனமகிழ்ச்சி யடைந்து அவருடைய மலர்
போன்ற பாதங்களைத் தலையினால் வணங்கிப், புனைந்த மலரணிந்த
கூந்தலையுடைய மனைவியார் தம்முடனே புதல்வரையும் துலையில்
இடுவதற்காக உடனே கொண்டு தகைமையினாலே இத்தன்மைத்தாகிய
செயலிலே துணிந்து ஏறுவாராகிய நாயனார் எடுத்துக் கூறுவாராய், 42
544. (இ-ள்.)
புரிந்த அன்பினாலே இறைவரது திருநீற்றிலே கொண்டு
செலுத்திய உண்மை யடிமைத் திறத்திலே இதுவரை நாங்கள்
பிழைசெய்தோமில்லை என்பது உண்மையாயின் பெருந் துலையானது நேர்
நிற்பதாக! என்று சொல்லி, மழையால் நிரம்பிய தடாகங்களும் பொழில்களும்
சூழ்ந்த திருநல்லூரில் விளக்கம்பெற எழுந்தருளிய இறைவரை வணங்கித்,
தழைத்த திருவைந்தெழுத்தினை விதிப்படி ஓதினாராகித் தட்டிலே ஏறினார்.
43
543. (வி-ரை.)
மனமகிழ்ந்து - மறையவர் இசைந்தது
பற்றி
மனமகிழ்ந்தார். இவ்வாறிசைந்ததனாற் றம்மைக் கொடுத்தாயினும் கோவண
நேர்தந்து அடியவர் பாற் பிழையினின்றும் உய்திபெறலாமென்ற வழி
கிடைத்ததுவே மகிழ்ச்சிக்குக் காரணம்.
முன்னர்த் திருவருள் பெறத் தொழுதார்
(541); இப்போது
அருள்பெற்றாராதலின் அதன் பொருட்டுக் கீழ் வீழ்ந்து அவரது
திருவடிகளில் தமது முடிதோய வணங்கினார் என்று குறிக்க இங்குச்
சென்னியால் வணங்கி என்றார்.
புனைமலர்க்குழல்
- புனைகுழல் - மலர்க்குழல் என்று தனித்தனி
கூட்டுக. புனைகுழல் - ஐந்து வகையாகப் புனையும்
தன்மையுடையதாகி,
அவற்றில் ஒரு வகையிலே மங்கலமாகப் புனையப்பெற்ற என்க.
ஒருவாற்றானும் புனையப்பெறாது அமங்கலக்குறிதோன்ற மயிர் விரித்துச்
சரிப்பதோ; அன்றி எவ்வாற்றானும் புனையலாகா வகையிலே துண்டித்து
நிறுத்தலோ, நீடிய மங்கலமாகக் கொண்டொழுகும்
இந்நாள் மக்களின்
உள்ளக்கிடை இதன் மங்கலமாகிய உள்ளுறையை நன்குணராது என்க.
மலர்க்குழல்
- மலரணிதலும் மங்கலத்தின் அடையாளமரம். அவை
இந்நாட்காணும் கோரக்காட்சியாகிய காகிதம் துணி முதலிய பலவற்றானு
மியன்ற போலிகளா யொழியாது உண்மையான இயற்கை மணந்தங்கிய
பூக்களாம். இங்குப் புனைதலும் மலரணிந்தமையும் கூறியது இவ்வலங்காரக்
கோலத்துடனே நித்திய மங்கலமாகிய வீட்டினை மனைவியார் தமது
நாயகனாருடனே அடைய நின்றாராதலின் என்பதாம். மலர்புனை குழல் என
மாற்றிவைத்து உரை கொள்வாருமுண்டு.
மனைவியார்
தம்மொடு புதல்வன்றனை இடக்கொடு - இட -
துலையில் இடுதற்கு. ஏறிட -
541 பார்க்க. மனைவியாருடன்
புதல்வன்றனைக் கொண்டு. ஒடு என்னும் மூன்றனுருபு
உடனிகழ்ச்சிப்
பொருள் குறித்தது. புதல்வனுடன் மனைவியாரை என்னாது இவ்வாறு கூறியது,
ஒரு புறம் நாயனாரையும் ஒரு புறம் புதல்வரையும் கூட்டிவைக்கும் தொடர்பு
பற்றி மனைவியார் என்றதுடன் சேர்த்துக் கூறியதாம். தம்மால் மனைவியாரும்
பின்னர் அவரால் புதல்வரும் பெற்றுள்ளபடியால் இம்முறை வைத்தோதினார்.
இருவராகத்து ளோருயிர் கண்டனம் - (திருக்கோவையார்) என்றபடி
மனைவியாரும் தாமும் உருவிற் பன்மையாகக் காணப்படுவது
|