பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்681

Periya Puranam

என்று - என்று சொல்லி. இழைத்த அன்பினில் - அன்பு இழைத்ததில்
என்று கூட்டுக. அன்புகொண்டு இழைத்த திருத்தொண்டின் செய்கைகளிலே.

     இறை திருநீற்று மெய்யடிமை - இறைவனது அருட்சத்தி யுருவமாகிய
திரு நீற்றின்பாலே வைத்துச் செய்த உண்மையான அடிமைத் திறம். இதிற்
பிழைத்திலாமையாவது திருநீற்று நெறியிலே விதித்தவைகளினின்று ஒரு
சிறிதேனும் மனம் வாக்குக் காயங்களில் அன்பினில் எவ்வாற்றானும் பிறழாது
நிற்றல். “பொச்ச மில்லடிமைத் திறம் புரிந்தவர்“ (542)

     பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று நாயனார்
கூறியது அவர் தமது உள்ளமும் உள்ளத்துள் நின்ற இறைவனும் அறிந்த
உண்மை நிலையின் உறுதிப்பாட்டைத் தேற்றம்பெற உணர்த்தி நிற்பது
காண்க. கோவணப் பொதிகளும், தனங்கள் யாவையும் நேர்நில்லா
தொழிந்தமை கண்ட நாயனார், அக்கோவணத்தின் பெரிய நிலையினைக்
கண்டும் இவ்வாறு தமது அடிமைத்திறத்தின் பிழையா நிலையை அதற்கு
நேர்பெறக் கூறிய துணிபென்னையோ? எனின், அன்பு பிழையா நிலையாகிய
உண்மையே சத்தியமாம். சத்தியம் இறைவன் உருவம்; சத்தின்முன் எதுவும்
உயர்ந்து திறம்பி நிற்க இயலாது என்பது உண்மை நூல்களின் முடிபு என்னும்
துணிபில் தாம் கண்டறிந்த உறுதிபற்றி என்க.

     பிழைத்திலோம் எனின் - தவறியதில்லை என்பதுண்மையாயின் -
இஃது உண்மையே என்றால்.

     பெருந்துலை - இவர் ஏற நின்ற தட்டு முன்னர்த் தம் பொருள்கள்
எல்லாவற்றையுங் கொள்ள இடந் தந்ததாற் பெரிதாயிற்று. மற்றைத் தட்டு
இவ்வெல்லாவற்றினும் கனத்து நின்ற கோவணத்தைக் கொண்டதால்
பெரிதாயிற்று. இவ்விருபெருந் தட்டுக்களைக் கொண்டு நிலை காட்டும்
துலையாதலின் பெருந்துலை என்றார். இதன் பெருமையினை நாம்
தொடர்ந்து அனுபவிக்குமாறு சிறப்புக் குறிக்கும் அகரச் சுட்டுக் கொடுத்து
அத்துலை என்று வரும் பாட்டிலும், பின்னரும் (548) ஆசிரியர்
கூறியருளியதும், முன்னர்த் தனித்துலை என்றதும் காண்க. பின்னர்
இவர்களைச் சிவபரியினிற் சேர்க்கும் விமானமாக இதுவேயாயின பெருமையும்
குறித்து “நற்பெருந்துலை“ (549) என்று சிறப்பித்தது முணர்க.

     நிற்க - வியங்கோள் வினைமுற்று. ‘கயவொடு ரவ்வொற் றீற்ற
வியங்கோள், இயலு மிடம்பா லெங்கு மென்ப' என்பதிலக்கணம். இஃது
எல்லா இடத்தும், எவ்வகைப் பாலுக்கும் ஒக்கும். நிற்க என்று ஆணையும்,
நிறுத்துக என்ற பொருளில் இறைவனை வேண்டிய விண்ணப்பமும் என
இருவழியும் கொள்ள வைத்த அழகினை யுன்னுக. உண்மை அன்பின் திறம்
எங்கும் இத்தன்மைத்தேயாம் என்ற உறுதியுமாம்.

     மழைத் தடம் பொழில் - மழைத்தடம் - மழைநீரால் நிரம்பிய
தடாகம். மழை பெய்யத் தடாகங்கள் நிறையும். மழையாற் காவிரியும்,
காவிரியாற் சோழநாட்டுத் தடங்களும் பெருகுமென்பது குறிப்பு. பொழில் -
சோலைகள். தடமும் பொழிலும் சூழ்ந்த திருநல்லூர் என்க. உம்மைத்தொகை.
“நாட்கொண்ட தாமரைப் பூந்தடம் சூழ்ந்த நல்லூர்“ என்ற அப்பர் சுவாமிகள்
திருவிருத்தமும் இங்கு நினைவு கூர்க. அணிமையில் இமையவர்
பொழியவிருக்கும் புதிய பூமழையும் (546), இறைவரது அருண்மழையும்
வரப்பெறும் நிலையினது முற்குறிப்பாக இங்கு மழைத்தடம் என்று
குறித்தவாறு.

     தழைத்த அஞ்செழுத்து - அன்பு தழைத்தற்குச் சாதனமும்
பயனுமாகிய திருவைந்தெழுத்து. இதனை ஓதுதல் இதனை விதிப்படி
எண்ணுதல். ‘விதிஎண்ணு மஞ்செழுத்தே' என்ற சிவஞானபோதத்தினுட்
காண்க இதனை எண்ணியபோது “தண்ணிழலாம்பதி“ என்றவாறு இது
அருளிலே உயிரைத் தழைக்கச்செய்யும், உலகிலே