வகை
:- மேலே கண்ட தொகைக்கு வகை செய்தவாறு. தொழுதும்
வணங்கியும் - தொழுதல் மனத்தாலும், வணங்குதல் காயத்தாலும் இயல்வன.
இவை கூறவே இனம்பற்றி வாக்கின் றொழிலாகிய துதித்தலும் உடன்
கொள்ளப்படும். தேடரும் சோதி - சோதி
உருவினனாகிய இறைவன்.
மாலயன்பா லிருளாயிருக்கு மொளி என்பது திருக்கோவை (73). தேடரும்
- தேடிக் காணற்கரிய. சோதி சென்று - இருவர்
தேவர் தம்மைத்
தேடற்கரியராயினும் இவரைத் தாம் தேடிச் சென்று. ஆங்கு
எழுதும்
தமிழ்ப்பழ ஆவணம் - அவ்விடத்தே அப்போதே எழுதியதே யாயினும்
பழைமை பொருந்திய ஓலை. பழைமையாய்க் காட்டியது - பழஞ் செய்தியைக்
குறித்தது என இருவகையுங் குறித்தது. என்றாயோ டென்னப்ப னேழேழ்
பிறவியும், அன்றே சிவனுக்குகெழுதிய ஆவணம் - திருமந்திரம்.
இதனையே விரிநூலினுள், ஆவணப் பழைமை காட்டி என்றது காண்க.
தமிழில் எழுதும் பழ ஆவணம் என்க. இவ்வெழுத்தின் விரிவு 205-ல் காண்க.
உன் குடி முழுதும் எனக்கு அடிமை; ஆதலின் நீயும் வந்து ஆட்செய்க
எனக் கூட்டுக. மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர்
குலம் (149) வழித்தொண்டு (205) முதலியவை காண்க. எனப்பெற்றவன்
- என்று சொல்லும் பேற்றினை முன்னர்த் தாம் வேண்டிப் பெற்றவன். ஆளே
- என முதனூல் பேசிற்று. ஆளாயினவகை இது என வழிநூல் வகுத்தபடி.
முரல் தேன் ஒழுகும் மலர் - முரலும் தேனாகிய
வண்டுகள் மொய்க்கின்ற
மலர். முரல் என்பது, உணவாந் தேன் என்ற
பொருளை நீக்கி ஊதும் தேன்
என்ற வண்டுகளைக் குறிப்பதனால் பிறிதினியைபு நீக்கிய விசேடணம்.
மலரின் நற்றார் - மலர் - சிறப்பு நோக்கித் தாமரை குறித்தது. தாமரை
மாலை அந்தணர்க்குரிய வடையாளமாலை. ஒழுகுதல்
ஈண்டு ஒழுங்குபட
மொய்த்தல் என்ற பொருளில் வந்தது. எம்பிரான் நம்பி
- நம்பியாண்டார்
நம்பிகள் இங்கு நம்பி ஆரூரரை எம்பிரான் நம்பி என வழங்கும்
உரிமைப்பாடு நோக்குக. ஆரூரனே - ஏகாரம்
தேற்றம்; பிரிநிலையுமாம்.
சோதி - சென்று - காட்டி, அடிமை - ஆட்செய் எனப் பெற்றவன் -
ஆரூரனே என முடிக்க.
550.
(இ-ள்.) வெளிப்படை.
தாமரையில் இருக்கும் பிரமதேவனும்
விட்டுணு மூர்த்தியும் காண்பதற் கரியவராகும் வள்ளலாராகிய சிவபெருமான்,
பலரும் புகழும் திருவெண்ணெய் நல்லூரிலே ஓலையின் பழைமையைக் காட்டி
உலகமுய்ய ஆண்டுகொள்ளப்பெற்றவராகிய நம்பியாரூரருடைய பாதங்களைத்
தியானித்துத் தலையின் மேல் வைத்துக்கெண்டு அதன் கீழ் வாழ்கின்ற
தலைமையே நமது தலைமையாவதாம்.
(வி-ரை.)
காணுதற்கு அரிய வள்ளல் - காட்டி
- பிரம
விட்டுணுக்கள் யாம் காண்போம் என்று காணலுற்றார்க்கு அரியவராகியும்,
தாமே கருணையினாலே வெளிப்பட எழுந்தருளி வந்து பலருமறியக்
காட்டினார் என்ற நயங் காண்க. அவர் காட்டக் காண்பதேயன்றி உயிர்கள்
காண வலியற்றன என்பது. மாலுமிரு வர்க்கு மரியா ரொருவர் வந்தார்
(174)
என முன்னர்க் கூறியது காண்க. வள்ளல் -
தாமே வலிய வந்து காட்டியதும்,
அவர் மறுப்பவும் விடாது பற்றி வழக்கிட்டு ஆட்கொண்டதும் வள்ளற்றன்மை
குறித்தன. இதுபற்றித் தடுத்தாட்கொண்ட புராணத்தில் (174) முன்னர்
உரைத்தவையும் காண்க. பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பல
ரேம்பலித் திருக்க, வென்னெடுங் கோயினெஞ்சுவீற் றிருந்த வெளிமை
என்றது கருவூர்த்தேவர் (தஞ்சை இராசராசேச்சுரம்
- 8) திருவிசைப்பா.
பலர்
புகழ் வெண்ணெய் நல்லூர் - பலர் புகழ் - அறிவோர்
பலரும். பலரும் - உம்மை தொக்கது. இதனை முதனிலைத் தீபமாக
வைத்துப், பலர் புகழ் ஆவணம் என்றும், பலர் புகழ் பழைமை என்றும்
கூட்டி யுரைத்தலுமாம். ஆவணப் பழைமை காட்டி
- அதன் தொன்மை
நோக்கி (204) என்றது காண்க.
|