பக்கம் எண் :


சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி691

Periya Puranam


சிவமயம்


சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

தொகை


ஆரூர னாருரி லம்மானுக் காளே.

             - திருத்தொண்டத் தொகை.

வகை


தொழுதும் வணங்கியு மாலயன் றேடருஞ் சோதிசென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங் காட்டி “யெனக்குன்குடி
முழுது மடிமை; வந் தாட்செ!“ யெனப்பெற் றவன்முரறே
னொழுகு மலரினற் றாரெம் பிரானம்பி யாரூரனே.

                      - திருத்தொண்டார் திருவந்தாதி

விரி


550. மலர்மிசை யயனு மாலுங் காணுதற் கரிய வள்ளல்  
  பலர்புகழ் வெண்ணெய் நல்லூ ராவணப் பழைமை
                                  காட்டி
யுலகுய்ய வாண்டு கொள்ளப் பெற்றவர் பாத
                                முன்னித்
தலைமிசை வைத்து வாழுந் தலைமைநந் தலைமை
                                 யாகும்.
49

     துதி - இனி, நிறுத்த முறையானே, “தில்லைவாழ்ந்தணர்“ என்று
தொடங்கும் தொகைப் பாசுரத்தினுள், அமர்நீதியார் புராணத்துக் கடுத்து,
“ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே“ என்ற பகுதியிற் போந்த,
ஆரூர்ப்பெருமானுக்கு நம்பிகள் ஆளாயின சரிதப்பகுதியினைக் கூறத்
தொடங்கிய ஆசிரியர் அதனை நம்பிகளது துதியாக வைத்துக் கூறுகின்றார்.
மேலும் அவ்வச் சருக்க இறுதியில் துதிகளாக வருவனவும் இவ்வாறே
கண்டுகொள்க. இதுவே திருத்தொண்டத் தொகைக்கு மகுடமென்ப.

     தொகை :- திருவாரூரில் எழுந்தளியிருக்கும் அம்மானாகிய
இறைவனுக்கு ஆரூரன் அடிமையே. ஆரூர் இறைவனுக்கு ஆளாகிய ஆரூரன்
என்கின்ற யான், தில்லைவாழந்தணர் முதலியோராக முன் சொல்லப்பட்ட
அடியார்களுக்குத் தனித் தனி அடியேனாவேன் என இப்பாட்டைத்
தொடர்புபடுத்தி முடித்துக் கொள்க. தில்லைவாழந்தணர் தம்மடியார்க்கும்,
இப்பாட்டிற்சொல்லிய ஏனையடியார்க்கும் அடியேனாகிய யான் ஆரூரில்
அம்மானுக்குமாளே யாவன் என முடித்தலுமாம். இப்பொருட்கு எச்சவும்மை
விரிக்க. எங்ஙனமாயினும் அடியார்களும் ஆண்டானும் ஒன்றுபோலவே
என்னை அடிமை கொள்பவர்கள் என்பது பொருளாகக் கொள்க.
இறைவனுக்காளாந் தன்மையுடையார்க்கே அவனது அடியவர்க்கு
ஆளாந்தன்மை ஆகும் என்பது சாத்திர முடிபு.

     ஆரூரன் - நம்பிகளது பிள்ளைத்திருநாமம் (150). ஆரூரில்
அம்மான்
- திருவாரூரில் எழுந்தருளிய எனது தலைவன். அவர்க்குந்
தமக்குமுள்ள முன்னைத் தொடர்பும், இம்மைத் தொடர்பும், பிறவுங் குறிக்க
அம்மான் என்றார். ஆளே - இறைவன் நம்பிகளை “இவன் எனக்கு ஆள்
என்று வழக்கிட்டு ஆளாகக் கொண்டான்; ஆதலின் அது குறிக்க ஆளே
என்றார். ஆள் - ஏவலாள். “ஆளாயிருக்கு மடியார்“, “உனக்கு ஆளாய்“,
“எம்பெருமாற் காளல்லேனெனலாமே“, “ஆட்செய வஞ்சுதுமே“ (நம்பிகள்
தேவாரம்), தடுத்து ஆட்கொண்ட புராணம் - முதலியவை காண்க. ஆளே -
ஏகாரம் தேற்றம். இப்பொருள்களை வகைநூலும் விரிநூலும் விரித்தது காண்க.