பக்கம் எண் :


98 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
மொழி வேதங்கள்; தண்டலை பலவும் - தாதகி பலவும் - எங்கும்
சோலைகள் பலவுள்ளன; ஆத்தியும் பலாமரங்களும் உள்ளன.

     (வி-ரை.) பாத செம்பஞ்சி எங்கும் என்றதனால் ஆடல் குறித்தவாறு.

“பாடலாடல் இன்னியங்கள் பயிறன் முதலாம் பண்ணையினில்
நீடு மினிய வினோதங்கள் நெருங்கு காலந் தொறுநிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செ யாரா மங்கள் வைகுவித்து”
               - கழறிற்றறிவார் நாயனார் புராணம் - 154

என்று பின்னர் எடுத்துரைக்குமாறும் காண்க.

     விபஞ்சி - யாழ்வகைகளுள் ஒன்று. வளரிசை - என்றதனை
யாழுடனும் சேர்க்க. யாழுங் குழலும் இன்னிசைக் கருவிகளிற்
சிறந்தவையாதலின் அவையிரண்டும் சேர்த்து யாழ் - இசைக்குழல் என
இங்குப் பேசப்பெற்றன. “குழலினிது யாழினிது” என்று சேர்த்து நாயனார்
எடுத்துக் காட்டியமை காண்க.

     வண்டறை குழல் - பெண்கள் வேய்ங்குழற் கானஞ் செய்யும்போது
அடுத்துக் கூந்தலில் உள்ள வண்டுகளும் ஒத்துச் சத்தித்தன ஆதலின்
இரண்டையும் ஒன்று சேர்த்து வளரிசை என்றார் என்பதுமாம்.

     இருக்கை - இருப்பிடம், இருக்கு + ஐ (இரண்டாம் வேற்றுமை யுருபு)
வேதத்தை என்க; இருக்கு வேதத்துக்குப் பொதுப்பெயர். “தூயகா விரியி
னன்னீர் கொண்டிருக் கோதி யாட்டி” என்ற தேவாரம் காண்க. மெய்யினாற்
செய்யும் தொண்டும், வாய்த்தொண்டும் கூறியவாறு. இவை மனத்தொண்டும்
இன்றியமையாது உடனே பெறுதலும் காண்க.

     தண்டலை பல - சோலைகளே தொண்டர்க் கிருப்பிடமாகவும்,
அவ்விடமே வேத கானம் நிகழுமிடமாகவும் உள்ளனவாதலும்,
அவ்விடங்களே யாழ் - குழல் - ஆடல் - பாடல் - பயிலும் இடமாதலும்
குறிப்பிட்டமை காண்க. தண்டலை - சோலை. தாதகி ஆத்தி. பல - பலா.

     இப்பாட்டிற் சொல்லியவை சொல்லணியாய்க் கூறிய துணையேயன்றிப்
பொருளியல்பில் ஒன்றற்கொன்று வேறுபட்ட பொருள்களென வெளித்
தோற்றத்தில் தோன்றினும் அழகிய தொடர்புபெற்ற ஒரே உள்ளுறை
கொண்டனவாதல் கண்டுகளிக்கத் தக்கதாம். அந்நாட்டு மக்களது
இன்பவாழ்க்கையின் இயல்பு கூறியவாறு.

     இவ்வாறே மேல்வருகின்ற இரண்டு பாட்டினும் கண்டுகொள்க. 32

83. மாடுபோ தகங்க ளெங்கும் வண்டுபோ தகங்க
                                ளெங்கும்
 
  பாடுமம் மனைக ளெங்கும் பயிலுமம் மனைக
                                ளெங்கும்
நீடுகே தனங்க ளெங்கும் நிதிநிகே தனங்க
                                ளெங்கும்
தோடுசூழ் மாலை யெங்குந் துணைவர்சூழ் மாலை
                                யெங்கும்.
33

இது சோலைகளினின்றும் போந்து மாளிகைகளைக் கூறுவது

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) போதகம் - யானைக் கன்று, மாடு - பக்கம். போது +
அகங்கள் - மலர்களின் உள்ளிடங்கள். போதுகள் அலரும்போது
வண்டுகள்குடையும் என்க. பாடும் + அம் + மனைகள் + எங்கும் - பாடல்கள்
பாடப்பெறும் அழகிய வீடுகள் எங்குமுள்ளன. பயிலும் + அம்மனைகள் -
பெண்கள் பயில்கின்ற அம்மனை என்கின்ற விளையாட்டுக்களும் எங்கும்
உள்ளன. சேதனம - கொடி. நிதி + நிகேதனம் - நிதிகள் பலவகையும்
நிறைந்த சேமவைப்புகள். பொன்னாற் செய்யப்பெற்ற கோயில் என்றும்
கூறுவர். தோடு - இதழ்கள் செறிந்த பூக்கள். சூழ்மாலை - பூக்கள்